Saturday, September 19, 2009

கந்தசாமியும், ராமசாமியும் இப்போ ஜேம்ஸ் & டேவிட்- எதனால் ?

இது இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கான பதிவு.


எங்க போய் இந்து சமயத்தைப் பற்றி பேசினாலும், வேற்று சமயத்தவர்கள் மற்றும் நாத்திகர்கள் கூறும் குற்றச்சாட்டு சாதி உயர்வு தாழ்வு பேதங்கள் இருப்பதைத் தான் குறையாக கூறுவார்கள். சாதியைப் பற்றி அலசுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. அது நாத்திகர்கள் மற்றும் திராவிட இயக்கங்களின் வேலை. மற்ற சமயத்தவரை புன்படுத்துவதோ, காயப்படுத்துவதோ இந்தப் பதிவின் நோக்கமல்ல. பல சூழ்ச்சிக்காரர்களால் பிரிக்கப்பட்டு இருக்கும் இந்து சமய மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியே இந்தப் பதிவின் நோக்கம்.

இதுக்கு இப்போ என்ன அவசியம் வந்துச்சுன்னு நீங்க கேக்கலாம். வெள்ளைக்காரன் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டான் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் ஒன்று இந்து, முஸ்லிம் என பிரித்து நம் நாட்டை அடைய நினைத்தது. மற்றொன்று, இருக்கிற சாதி வேறுபாடுகளை பெரிதுபடுத்தி, இந்துக்களின் ஒற்றுமையை உடைத்தெறிந்து, நாட்டைத் துண்டு போட திட்டம் தீட்டியது.

ஒரு காலக் கட்டத்தில் பிராமண சமுதாயம் மற்ற சமுதாயங்களின் மீது ஆதிக்கம் செலுத்தின என்பது யாரும் மறுக்க முடியாது உண்மை. அதனுடைய விளைவு தான் மதமாற்றம். இதில் பிராமண சமுதாயத்தை மட்டும் சொல்ல முடியாது, உயர் சாதி என சொல்லி கொள்ளும் பல சாதிகள் தாழ்த்தப்பட்ட மக்களையும், பழங்குடி மக்களையும் தாழ்வாக நினைத்து அவர்களை தனிமைப்படுத்துவதும் இது போன்ற மதமாற்றங்களுக்கு காரணம்.

மனமாற்றத்தின் காரணமாக மதம் மாறுவது என்பது அவரவர் தனிப்பட்ட் உரிமை. அதனைத் தடுப்பது நமது நோக்கமல்ல. பொதுவாக, பெரும்பான்மையாக கிறித்துவத்திற்கு மாறுபவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தான். அதுவும் அந்த சமயத்தின் மீது ஈடுபாடு கொண்டு மதமாறுபவர்கள் அல்ல. ஒரு சமூக அந்தஸ்திற்காக மதம் மாறுபவர்களே அவர்கள். அதுமட்டுமல்லாமல், பணம் கொடுத்து மதம் மாற்றம் செய்வது, மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்பவர்கள், இவற்றையே தொழிலாக கொண்டு இயங்கும் Evangelistகள். இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மேற்கத்திய நாடுகள். தொண்டு என்கின்ற பெயரில் உள்ளே நுழைந்து, அனைவரையும் கிறித்துவராக மாற்றுவதே அவர்களின் குறிக்கோள். இது அனைவருக்கும் தெரியும்.


நிலைமை இப்படி இருக்க, நம் சமயத்தில் இருப்பவரை சாதி சொல்லி பழித்து, உயர்வு தாழ்வு பார்த்து, நாமே நம்முடைய சமயத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறோம். இது ரொம்ப உச்ச கட்ட நிலைமை. நம்முடைய சமயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதே மதவாதம் என்று சொல்லும் அளவுக்கு மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சிகள் நனவாகிக் கொண்டிருக்கிறது. வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவோம். தலித், பிராமணன், முதலி, பிள்ளை, தேவர், நாடார், செட்டியார், வன்னியர்,உடையார் என அனைவரும் ஒன்றுபடுவோம். நம் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவோம்.


இந்தியாவின் கலாச்சாரம் என்பது இந்துக் கலாச்சாரமே. இந்தியாவின் கலாச்சாரம் மட்டுமல்ல, தமிழனின் தொன்று தொட்ட கலாச்சாரமும் இந்துக் கலாச்சாரம் தான். பெரியாருக்கு பிறகு வந்த கலாச்சாரம், திராவிட கழக கலாச்சாரம். தமிழ் கலாச்சாரம் கிடையாது. பெரியார் கூட, தாழ்த்தப்பட்டவங்க எல்லாம் வேறு சமயம் மாறனும்னா, இஸ்லாமுக்கு மாறுங்கள். கிறித்துவத்திற்கு வேண்டாம். ஏனென்றால், கிறித்துவத்திற்கு மாறினாலும், சாதி ஒழியாது, நீங்கள் இந்துவாகவே இருப்பீர்கள் என்று சொன்னார். அதற்கேற்றார் போல, மாதா கோவிலுக்கு கற்பூரம் காட்டுற அளவுக்கு நம்ம ஊர் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி, மதமாற்றம் செய்து வருகிறார்கள். உலகளவில், இந்தியாவின் பெருமையே நம் கலாச்சாரங்கள் தான். அது தொலைந்து போக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது. இதற்கு எல்லோருமே ஒன்றினைந்து தான் செயல்படனும். அதற்கான முதல் படியை நாம் தான் எடுத்து வைக்க வேண்டும்.

ஒவ்வொருவர் செய்யும் தொழிலை வைத்து வகுக்கப்பட்டது தான் சாதி. அதை மனிதன் தன் சுய நலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டு, சமயத்தின் மீது சாயலைப் பூசுகிறான். கல்வியறிவு, மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் சாதி அழியத் தொடங்கி இருப்பது நம் சமயத்திற்கு நல்லதே ! இனி சாதி வைத்து உயர்வு தாழ்வு பார்ப்பதை விட்டொழிக்க வேண்டும் !

இதில் பெரும்பாலும் நம் சமயத்தை வம்புக்கு இழுப்பவர்கள் திராவிட கழகத்தினர். இந்துக்களைத் தவிர, கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாம் அதனுடைய அங்கத்தினர்கள். ஆகையால் தூற்றுவோர் அனைவரும் நாத்திகர்கள் அல்ல, வேற்று சமயத்தினர் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதனுடைய பின்னூட்டங்களில் கூட பெயர் வித்தைகள் காட்டுவர். நம் சமயத்திற்குள்ளேயே சண்டையிட்டுக்கொள்ள வேண்டும் என்பதே சிலரின் எண்ணம். அதற்காக, உணர்ச்சி வசப்பட்டு, நமக்குள்ளேயே சண்டை போட்டு கொள்வது, நாம் ஏமாறுகிறோம் என்றே அர்த்தம். ஆகையால், சூழ்ச்சிகளுக்குள் சிக்காதீர்கள். இது நம் சமயத்தைப் பற்றிய ஒரு Self-Introspection.


பல இடங்களில், பல விதமாக பேசி ஏளனம் செய்து, சமயத்திற்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரம் செய்யும் கைக்கூலிகளை அவர்கள் வழியிலேயே சென்று தான் பாடம் புகட்ட வேண்டும். வெளிப்படையாக பேசுவதன் மூலம் ஏதாச்சும் நன்மை வராதான்னு ஒரு ஆசை தான். அன்பையும், சிறந்த வாழ்க்கை நெறியையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித இனத்துக்கு சொல்லி வழிகாட்டிய நம் சமயத்தை நாமே அழிவுக்கு கொண்டு சொல்கின்றோமோ என்ற வேதனை தான். இப்படி பேசுவது ஒரு மதவாதி போல உங்களுக்கு தோன்றினால், காந்தியடிகள், சர்தார் வல்லபாய் படேல், கோபால கிருஷ்ண கோகுலே, பாரதியார், ஜெய்பிரகாஷ் நாராயன் என அனைவரும் மதவாதிகள் தான். தம் சமயத்தைப் பற்றி, தம் மக்களின் நலன்களைப் பற்றிப் பேசுவது மேற்கத்திய சமயங்களுக்கு மதவாதி போல தோன்றினாலும், கவலை இல்லை.


இவற்றை எல்லாம், மத மாற்ற தடை சட்டம் போட்டு தடுத்து நிறுத்துவதைக் காட்டிலும், நம் மனங்கள் மாறி அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து நடந்தால், இது போன்ற சூழ்ச்சிக் கூட்டங்கள் தானாக ஓடி விடும்!


அப்புறம், டேவிட், ஜேம்ஸ் நம்முடைய பழைய கந்தசாமியாகவும், ராமசாமியாகவும் திரும்பி வருவர் என்பதில் ஐயமில்லை!

Saturday, September 5, 2009

தமிழனின் தீராத சனி -திராவிட இயக்கங்கள்!


அனைவருக்கும் தெரிந்த, பெரும்பாலனவர்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் இருப்பதைத் தான் தலைப்பாகச் சொல்லி இருக்கிறேன். ஆகையால், இவற்றினுள் பெரிதாக செல்லாமல், இவர்களின் செயல்பாடுகளை மட்டும் லேசாக விமர்சிக்கும் வகையில் இங்கே சில எண்ணங்கள்.

இது கொஞ்சம் டி.ஆர் பாணியில்...

சனிக்கோ எள்ளு,
பெரியார் திராவிடனுக்கோ ஃபுல்லு...
பணத்தைக் கண்டு விடுவதோ ஜொல்லு
இவர்களின் கொள்கை நாடகம் ஒரு லொல்லு
இந்த ஈழப் பிண வியாபாரிகளைப் (திராவிட இயக்கங்கள்) புறம் தள்ளு
தமிழன் விழித்தால் உங்கள் தலையில் விழும் கல்லு
பெரியாரின் திராவிடனே நில்லு...
திராவிடன் கேட்கிறேன் சொல்லு!

இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். அந்தக் கும்பலைப் பெரியாரின் திராவிடனாகவும், நம்மைப் திராவிடனாகவும் சொல்லி இருக்கிறேன். பெரியார் வந்து திராவிடத்தைக் கண்டுபிடிக்க வில்லை. அவருக்கு ஏற்றார் போல திராவிடத்தை மாற்ற முயற்சித்தார், அப்படி மாறியவர்களே பெரியார் திராவிடன். ஏதோ திராவிடனை இவர்கள் தான் லீசுக்கு எடுத்தது போல பேசுவது உண்மைத் தெர்ந்தவர்களுக்கு சிரிப்பைத் தான் வரவழைக்கும் : )

-----------------------------------------------------------------------------------

திராவிட இயக்கமும், சனியும் ஒரு ஒப்பீடு !

இருவருக்கும் கருப்பு தான் பிடித்த நிறம்.

காக்கா - சனிப்பகவானுக்குப் பிடித்த வாகனம் .
காக்கா பிடிப்பதே திராவிட அரசியலின் தாரக மந்திரம்.
சனி நம் வீட்டிற்கு வந்தால் தனி மனிதனுக்கு கஷ்டம்
திராவிட இயக்கம் இங்கே வந்ததால், தமிழ்நாட்டிற்கே கஷ்டம்!
2 1/2 வருடத்திற்கு ஒரு முறை வீடு மாறுபவர் சனி
காசு கொடுத்தால், எப்பொழுதானாலும் கொள்கை மாறுபவர்கள் திராவிட இயக்கங்கள்!

காரியம் கைகூட, சனி பகவானுக்கு வைப்பது எள்ளு
தமிழனை ஏமாற்ற திராவிட இயக்கங்களுக்கு கொடுப்பது, மந்திரி பதவியும், ஃபுள்ளும்.

ஜென்ம சனியே 7 1/2 வருடம்
இந்த சனி எத்தனை வருடம்?

-----------------------------------------------------------------------------------

ஈழத்துப் பிணங்களின் நெருப்பில்,
பதவிக் குளிர்க்காயும்,
பெரியார் திராவிடர்கள்..!

இது தெரியாமல்
கொள்கை என நினைத்து
ஜால்ரா அடிக்கும்
திராவிடத் தொண்டர்கள்..!

திராவிடனே யார்
என்று தெரியாத
அப்பாவி பொதுஜனம்..!
-----------------------------------------------------------------------------------

என் கட்சி
என் குடும்பம்
என் சொத்து
என் கொள்ளை
இதுவே எங்களின் கொள்கை
எதிர்த்துப் பேசினால்
பார்ப்பனியம் என்பேன்
மூடநம்பிக்கை என்பேன்
தமிழ் விரோதி என்பேன்
ஆரிய மாயை என்பேன் திராவிடத்
துரோகி என்பேன்
அடங்கிப் போனால்
உன்னைப் பெரியார்த் திராவிடன் என்று சொல்லி
வார்டு கவுன்சிலர் ஆக்குவேன்...!

- தமிழினத் தலைவரும்,
தமிழர்த் தலைவரும்..
-----------------------------------------------------------------------------------


ஓட்டு, பின்னூட்டம் இடவில்லை என்றாலும் பரவாயில்லை,தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதியை உலகிற்கு எடுத்துரைத்த சேனல் 4 தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவியுங்கள்
news@channel4.com