Monday, June 29, 2009

தாஜ்மகால் - காதலின் சின்னமா?


உலகில் ஏழு அதிசயங்களில் ஒன்று, மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நினைவகம்,முதல் முறை பார்க்கும் போது நம் கண்கள் அதன் அழகினில் மூழ்கி வேறு திசைக்கு திரும்ப மறுக்கும் அளவிற்கு ரம்யமாக காட்சி அளிக்கும். இவை அனைத்தும் மறுக்க முடியாத ஒன்று. அப்படி ஒரு அற்புதம் தாஜ்மஹால்.


ஆனால் இது ஒரு காதலின் சின்னமா? யார் இப்படி ஆரம்பித்தது? நிச்சயமாக ஏதாவது ஒரு சினிமாக்காரராகத் தான் இருக்க வேண்டும். பழங்காலக் கவிகள் பலர் காதலை பற்றி கதைகள், கட்டுரைகள், கவிதைகள் பாடி இருந்தாலும், காதலை தாஜ்மஹாலுடன் ஒப்பிட்டு கவி பாடியதில்லை. அப்படி என்றால் இதை சினிமாக்காரர்கள் தான் துவக்கி இருக்க வேண்டும்.



ஷாஜகான் மும்தாஜ் மீது வைத்துள்ள காதலுக்காக கட்டியது தானே தாஜ்மகால். அது காதலின் சின்னம் தானே என்று நமக்கு தோன்றுவது இயல்பு. நாம் தாஜ்மகாலை சரியாகத் தான் உவமேயப் படுத்துகிறோமா என தெரிந்து கொள்ள, அப்படி என்ன தான் செய்தார் ஷாஜகான் என அறிந்து கொள்வது முக்கியம்.


முகலாய மன்னர் ஜஹாங்கீருக்கும், அவரது இரண்டாவது மனைவி ராஜ்புட் இளவரசி ஜகத் கோசைன் என்பவருக்கும் பிறந்தவர் தான் ஷாஜகான்(1628-1658). தாய் இந்துவாக இருந்தாலும்,இஸ்லாமின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். மற்ற சமயத்தினர் மீது இரக்கம் காட்டாத மிருகம் போல தான் வாழ்ந்தார் ஷாஜகான்.


1. இஸ்லாத்தின் கொள்கைகளை, கிறித்துவம் திருடுவதாக கூறி, தன் ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான கிறித்துவர்களை கொன்று குவித்தவர் இந்த ஷாஜகான்.


2. ஷாஜகானிற்கு வரலாற்றின் படி மொத்தம் 3 மனைவிகள் பெயர் தெரியும், ஆனால் பல மனைவியர் உண்டு என்று சொல்கிறார்கள். முதலாவது மனைவி தான் மும்தாஜ். அப்படியாப்பட்ட காதல்
இருந்தால் இரண்டாவது, மூன்றாவது மனைவியரை ஏன் மணந்தார் என்று தெரியவில்லை.


3.பல மனைவியர் மட்டும் இல்லாமல், தன்னை மகிழ்விக்க பெரும் மங்கையர் கூட்டத்தையே வைத்திருந்தார் ஷாஜகான். ஷாஜகானின் மகனான அவுரங்கஜீப் அவரை சிறை பிடித்த போது கூட, அந்த மங்கையர் கூட்டம் வேண்டும் என அட்ம் பிடித்து கூடவே வைத்து இருந்தாராம் ஷாஜகான். அப்படி ஒரு காமத்தின் அடிமை ஷாஜகான்.


4.தங்கள் பதினெட்டு வருட திருமண வாழ்க்கையில், மும்தாஜ் 14 பிள்ளைகளைப் பெற்றார். 14 வது பிள்ளையை ஈன்றெடுக்கும் போது தான் அவர் இறந்தார். அதன் பிறது 22000 ஊழியர்களை வைத்து, 22 ஆண்டுகளாக கட்டப்பட்ட கட்டிடம் தான் தாஜ் மகால்.


5. தாஜ்மகாலை கட்டி முடித்தவுடன், அதன் கட்டிட வடிவமைப்பாளரின் விழியைப் பிடுங்கி, தலையை வெட்டி(beheading) கொலை செய்தாராம் ஷாஜகான். அது மட்டுமல்ல, தாஜ்மகாலை உருவாக்க காரணமாக இருந்த 22000 தொழிலாளர்களின் இரு கை விரல்களையும் வெட்டினாராம் ஷாஜகான். யாரும் இது போல கட்டிடத்தை இனிமேல் கட்டக் கூடாது என்பது அவர் சொன்ன காரணம்.

ஒரே ஒரு பொண்ணுக்காக, இத்தனை பேரை கொடுமைப்படுத்தி, சாவடித்து, கட்டிய கல்லரை ஒரு காதலின் சின்னமா?
வரலாற்றை படித்த பின், தாஜ்மகாலைப் பார்த்தால் ஷாஜகானின் கொடுமைகளும், அவன் காம குணங்களும் தான் நினைவுக்கு வருகிறது.


காதல், இதில் தெரிகிறதா இல்லையா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் !

Thursday, June 25, 2009

அறியாமை என்னும் பகுத்தறிவு!

நாடே இந்திய சுதந்திரத்துக்கு போராட்டம் நடத்திய போது , அதில் கலந்துகொள்ளாமல், ஜாதியை வைத்து உள்ளூர் அரசியல் நடத்தியது யார் ?

அ) தந்தைப் பெரியார்
ஆ)ராஜாஜி
இ) காந்தியடிகள்

பயங்கரமான இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறை கண்டு, போராளி போல காட்டிக் கொண்டு, தன் சொந்தக்காரருக்கு இந்தி தெரியும் என்பதால் தான் மத்திய மந்திரி பதவி தந்தேன் என்று சொன்ன பகுத்தறிவு சிங்கம் யார்?


அ) கருணாநிதி
ஆ) தந்தை பெரியார்
இ)கி.வீரமணி

எந்த நாட்டின் சுதந்திர நாளை துக்க தினமாக அனுசரித்தவர் தந்தை பெரியார்?
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) ரஷ்யா


கீழ்கண்டவற்றில் திராவிடன் அல்லாதவனை தூக்கி எறி
அ) ஜோஸ்ப் கிறிஸ்டோபர்
ஆ) ஹஃபீஸ் சயீத்
இ) சிவகுமார்.

பகுத்து ஆராய்வது பகுத்தறிவு என்பது போய், பார்ப்பன எதிர்ப்பு தான் பகுத்தறிவு என்ற மிகப் பெரிய பகுத்தறிவு தத்துவத்தை பின்பற்றும் இயக்கம் எது?


அ) திராவிட கழகம்
ஆ)பாரதிய ஜனதா கட்சி
இ)தேசிய முற்போக்கு திராவிட கழகம்

இதற்கு பதில் அனைவருக்கும் தெரிந்ததே...கொஞ்சம் யோசிச்சு பாருங்க பகுத்தறிவு இயக்கங்களின் அறியாமையைப் பற்றியும் நமக்கு தெரிந்துவிடும்.

எப்படி மூட நம்பிக்கையை திராவிட இயக்கங்கள் சமூகத்தில் இருந்து நீக்க வேண்டி பாடுபடுகிறார்களோ அதே போல பகுத்தறிவு அறியாமையை நீக்க வேண்டிய கட்டாயமும் திராவிடர்களாகிய நமக்கு உண்டு (எடுத்துக் காட்டு உவமை அணி)

பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் ,தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்,திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர்
திருமந்திரம் பாடிய திருமூலர் இவர்களின் அழகு தமிழை புரிந்த கொள்ளவே முடியாத பகுத்தறிவு இயக்கங்கள், திராவிடனுக்கு புது அர்த்தங்கள் கண்டுபிடிக்கின்றன. இதோ சேக்கிழார், அப்பர், கம்பர், ஔவையார் இவங்க எல்லாம் திராவிடன் இல்லையா ?

இதே தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை, சுயமரியாதை என பார்ப்பனரான பாரதியாரும் தான் போராடினார். பாரதியார் திராவிட்னா இல்லையா?


சரி, உங்க பாஷையில கன்னடம், தெலுங்கு,மலையாளம் பேசுறவங்க திராவிடனா இல்லையா?


வட இந்தியாவுல இருக்கவங்க எல்லாருமே ஆர்யர்கள் என்றால், அங்கு வாழும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் எல்லாம் யார்? மாயாவதி யாருக்காக கட்சி நடத்துறாங்க?

திராவிடனும் ஆர்யனும் தான் எதிரி, சண்டை என்றால், மராட்டியருக்கும் பீகாரிக்கும் எதுக்கும் சண்டை? இருவரும் ஆர்யர்கள் தானே?

திராவிடனுக்கு, உங்க பெரியார் ட்ரஸ்ட் கல்லூரிகளில் டொனேஷன் வாங்கறதில்லையா?

ஜாதி வேற்றுமை பார்க்கக் கூடாது, சமூக நீதி காப்பாற்றுவது, சுயமரியாதை இவை எல்லா மககளுக்கும் உண்டு. இதில் வேறுபாடு இல்லை.

ஆனால், இந்து சமயத்தை இழிவாக பேசி, விதண்டாவாத்ம் பேசி பெருமை தேட முயற்சிக்க வேண்டாம்.


அப்படியாப்பட்ட பெரியாரே, சைவ சித்தாந்த துறவியான மறைமலை அடிகளாரை தன் இடத்திற்கு வரவழைத்து விருந்தளித்தார். அந்த சமயத்தில், யாரும் அவர் புன்படும் படி பேச கூடாது, இவ்விடத்தில் புலால் சமைக்க கூடாது என்று கன்னியத்தோடு, பிறர் நம்பிக்கைகள் புன்படாதவாறு, நடந்து கொண்டவர் பெரியார்.

"ஞாயிற்றைக் கை மறைப்பார் இல்"- அறிவை சுட்டிக்காட்டி வள்ளுவன் சொல்லியதை, இந்து சமயத்தை ஒப்பிடுகிறோம் இங்கே!

உங்களைப் போல் 10000 இயக்கங்கள் வந்தாலும் இந்து சமயத்தின் நம்பிக்கைகளையும், கலாச்சாரங்களையும் பழக்கவழக்கங்களையும் அழிக்க முடியாது.

பகுத்தறிவு ஞானிகள் என்று சொல்லி கொள்பவர்கள் இவற்றை எல்லாம் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள்.

ஈரோடு வெங்கட ராமசாமி நாயக்கர் மட்டும் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்தால், "அடடா...நம்ம வளத்த சொத்தை இப்படி அழிக்கிறாங்களே....சாமி இல்லைன்னு சொல்றதுக்கு சம்பளம் கொடுத்து ஆள் வச்சி இருக்காங்களே... " வருத்தப் பட்டிருப்பார்.

ஊர்ல பருவ மழை வரலை, விவசாயிகளோட நலனை பாதுகாத்திடுங்கள். எத்தனையோ பேர் பசியும் பட்டினியுமா இருக்காங்க...அவங்களுக்கு ஏதாச்சும் செய்யுங்க...ஈழத்து அவலங்களுக்கு எதாவது வழி சொல்லுங்க...பகுத்தறிவு சிங்கங்கள் தானே ஆட்சில இருக்கு.....எதாச்சும் செய்யலாமே...ஆட்சியும் அதிகாரமும் கையில் இருக்கும்போது, போராட்ட வேஷங்கள் எதற்கு?

பைசா வந்தா திராவிட இயக்கங்கள் பகுத்தறிவு பஞ்சா பறந்து போகுமோ?

Tuesday, June 16, 2009

திறமையை மிதிக்கும் சிறுபாண்மையினர் இட ஒதுக்கீடு !


நல்ல மதிப்பெண் பெற்றும், தான் விரும்பிய கல்லூரியில், படிப்பில் சேர முடியாத மகன் கேட்கும் கேள்விகளுக்கு அப்பா பதில் சொல்வது போல அமைந்து இருப்பது தான் இந்த பதிவு.

மகன் : அப்பா, என்னை விட கம்மி மார்க் எடுத்தவங்களுக்கு எல்லாம் நல்ல காலேஜ்ல சீட் கிடைச்சு இருக்கு, எனக்கு மட்டும் ஏன் பா இப்படி?
அப்பா : அதெப்படி கண்ணா, கட்-ஆப் வரிசையில் தானே சீட் கொடுக்கிறாங்க?


மகன் : நம்ம பக்கத்து வீட்டு ஜேம்சும், எதிர் வீட்டு முகம்மதும் என்னை விட மார்க் ரொம்ப கம்மி பா, ஆனா அவங்களுக்கு எல்லாம் சீட் கிடைச்சு இருக்கு பா, நான் இவ்வளவு மார்க் எடுத்தும் எனக்கு கிடைக்கலியே பா?
அப்பா: கண்ணா, அவங்களுக்கு எல்லாம் தனியா 3% இட ஓதுக்கீடு இருக்குப்பா..


மகன் : ஏன், அப்படி?
அப்பா : சிறுபாண்மையினர்க்கு 3% இட ஒதுக்கீடு அரசு அறிவிச்சு இருக்காங்கப்பா..


மகன் : நம்ம எல்லோரும் ஒரே தெருவுல இருக்கும், நாங்க மூனு பேரும் ஒர வகுப்புல தான் படிச்சோம், இன்னும் சொல்ல போனா, நம்ம எல்லோருக்கும் ஒரே மாதிரி வசதி வாய்ப்பு தான்....ஆனா அவங்களுக்கு மட்டும் ஏன் பா?
அப்பா :அது அப்படி தான் பா...எல்லா சமயத்தவருக்கும் சரி சமமான வாய்ப்பு கொடுக்கணும்ங்கறது அரசோட திட்டம் கண்ணா..


மகன் : ஆனா, அந்த 3% இட ஒதுக்கீடு, என்னுடைய தட்டில் இருந்த, ஒரே இட்லியை இன்னொருத்தருக்கு புடுங்கி கொடுக்குற மாதிரி தானப்பா? என்ன மாதிரி எத்தனையோ மாணவர்கள், மார்க் இருந்தும் சேர முடியாம போகுதே...அது சரி தானா பா?
அப்பா : நம்முடைய நாடு செக்யூலர் நாடு பா...மதச் சார்பில்லா நாடு....எல்லரையும் அனுசரிச்சு போகணும் கண்ணா?


மகன் : இந்துக்களின் உரிமையை பறிக்குறது தான்..செக்யூலரிஸ்மா?
அப்பா : எந்த ஒரு சமயத்தவரையும் புன்படுத்தாம, எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துறது தான் செக்யூலரிசம் கண்ணா.அதான், பிஜெபியை எல்லோரும் மதவாதக் கட்சின்னு சொல்றாங்கள்.


மகன் : அதென்ன பா, மதவாதக் கட்சி?
அப்பா: ஒருதலைப் பட்சமா, இந்து சமுதாயத்துக்காக பேசுறாங்க அவங்க...அதான் மதவாதக் கட்சி...


மகன் : கலைஞ்சர் மட்டும், "இந்து என்றால் திருடன்", "ராமன் ஒரு குடிகாரன்","கார்த்திகை நோன்பு மூடத்தனமானது,ரம்ஜான் நோன்பு உடம்பிற்கு நல்லதுன்னு" நம்முடைய சமுதாயத்தை கேவலப்படுத்தி பேசுறாரே அவரும் மதவாதியா அப்பா?
அப்பா : இல்லை பா, நம்ம தமிழினத் தலைவர் மதவாதி இல்லை, திராவிடன் ..

மகன் : திராவிடன்னா...யாரு பா?
அப்பா : டேய் போய், வேலையை பாரு டா....திராவிட கட்சிக்காரனுக்கே தெரியாத கேள்வி எல்லாம் என்னை கேட்டுட்டு இருக்கே ! போ...போய் ஒழுங்கா படிக்குற வேலையை பாரு. அடுத்தது அரசு, தனியார் பணிகளிலும் இட ஒதுக்கீடு எடுத்துட்டு வர்றாங்களாம், நீ வேற இந்து, நல்லா படி, அப்ப தான் நமக்கு இந்த செக்யூலர் நாட்டுல சோறு!

எப்ப தான் இந்துக்களை மூன்றாம் தர குடிமக்களாக பார்க்கும் வழக்கத்தை நிறுத்தப் போறாங்களோ தெரியல!


கலிலியோவை மிரட்டிய போப்பாண்டவர் !

பல சமயங்களில், பல இடங்களில், பல மேடைகளில் இந்து சமயம் மூடத்தனமான சமயம், அதன் நெறி முறைகள் அறிவியலுக்கு எதிரானது என்று பலர் தப்பட்டம் அடித்துக் கொண்டு திரிபவர்களை நாம் பார்த்து இருக்கிறோம்.

உலகில் உள்ள சமயங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. ஹிந்தூயிசம்
2. ஜுடாயிசம்.

ஹிந்தூயிசம் - இதிலிருந்து தோன்றியவைகள் தான் பௌத்தம், ஜைனம்,சீக்கியம் மற்றும் சில சமயங்கள்.
ஜுடாயிசம் - இதிலிருந்து தோன்றியவகள் தான் இஸ்லாமும், கிறித்துவமும்.
இந்து சமயம் அறிவியலுக்கு எதிரானது என்பது முற்றிலும் பொய்யான கூற்று.

உதாரணமாக கிறித்துவத்துக்கு வருவோம்.

இயேசு ஒரு கன்னித் தாய்க்கு பிறந்தவர் என்று கூறுகிறது பைபிள். (இதனை அறிவியல் ஏற்றுக் கொள்ளுகிறதா?)

அதுமட்டுமல்ல, விஞ்ஞானி கலிலியோவை, போப் மிரட்டிய சம்பங்களும் உண்டு. இதோ சொல்றங்க.

கிறித்துவத்தின் படி (பழைய ஏற்பாட்டின் படி) சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று கூறியது பபிள். ஆனால், கலிலியோவோ, சூரியன் பூமியைச் சுற்ற வில்லை, பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்று கூறினார். இது வேதத்திற்கு எதிரானதாக இருப்பதாக கூறி, போப் அவருக்கு அழைப்பு விடுத்தார். நீங்கள் இதை வேதம் சொல்வது மாற்றி எழுத வேண்டும் என்றார். அதற்கு, வெகு இயல்பாக நகைச்சுவையோடு, "சூரியனோ பூமியோ உங்களிடம் வந்து சண்டையிடப் போவது இல்லை, அதனால் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். என் கண்டுபிடிப்பை மாற்றி எழுத முடியாதுன்னு " சொல்லிட்டார்.

இப்படி பல வரலாற்று விஷயங்கள், சமயத்தையும் அறிவியலையும் எதிரிகளாக மாற்றிய சம்பவங்கள் உண்டு.

இது போல அறிவியலால், இந்து சமய நெறிகளை இன்று வரை மறுக்க முடியவில்லை. இந்த ராமர் பாலம் மேட்டர் கூட அப்படித் தான். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மாதிரியான கற்களால் கட்டபட்ட பாலம், கடலில் மூழ்கி இருந்து, வேதியியல் மாற்றம் ஏற்பட்டு இன்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என இதனுடைய ஆராய்ச்சியே இன்னும் முடிவுக்கு வரல. அது மட்டும் அல்ல, இப்படி பட்ட விஷயங்களுக்கு நாங்கள் கருத்து சொல்ல மாட்டோம் என்று நாசா அமைப்பு கூட தெரிவித்துள்ளது .

இந்து சமயத்தில் அறிவியலுக்கு எட்டாத விஷயங்கள் இருக்கலாம். உதாரணமாக ஆன்மீகம். அறிவியல் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசும், கிண்டல் செய்யும், ஆன்மீகத்திடம் அதன் பப்பு வேகாது. பிறப்பிற்கு முன் நீ யார், இறப்பிற்கு பின் நீ யார்? இது தான் முக்கியமான கேள்வி. இவை அறிவியலுக்கு தெரியாது என்பதால் இவைகள் மூட நம்பிக்கைகள் ஆகாது. அதாவது நிரூபிக்கப்பட முடியாத விஷயங்கள் எல்லாம் மூட நம்பிக்கைகள் அல்ல. மற்றொருவனுக்கு தீங்கு விளைவிக்காத, யாரையும் பாதிக்காத நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள் ஆகாது.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க. மற்ற சமயங்களைப் போல ஒரு நாளைக்கு இத்தனை முறை தொழ வேண்டும், வாரத்திற்கு ஒரு முறை ஆலயத்துக்கு செல்ல வேண்டும், கண்டிப்பாக வேத நூல்களை படிக்க வேண்டும், இப்படி எந்த வித கட்டுப்பாடுகளும் இந்து சமயத்தில் கிடையாது. அது மட்டும் அல்ல, கால மாற்றங்களுக்கு ஏற்றபடி வேத நூல்களுக்கு வெர்ஷன் போட்டு மாற்றுவதும் கிடையாது. இப்படி எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ஒரு சமயம் தழைத்து ஓங்கி இருக்கிறது என்றால், அது நிச்சயம், பல நூறு கோடி மக்களின்வாழ்க்கையை, செம்மையாகவும் சிறப்பாகவும் வாழ வழி செய்திருக்கிறது என்பது தான் விளங்கும்.


எந்த சமயத்தையும் மறுக்கவோ, புன்படுத்தவோ இதை எழுதல. எத்தனையையோ ப்ரேயர் மீட்டங்க்ல இந்து கடவுள்களை எப்படி எல்லாம் கேவலப் படுத்துறாங்க, எப்படி பழிக்கிறார்கள்னு நமக்கு தெரியும். அப்படி எல்லாம் நாங்க இல்லீங்க, எங்களுடைய நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்க வேணாம், அவமானப் படுத்தாம இருங்க. எல்லா சமயங்களிலும் ஓட்டைகள் இருக்குன்னு சொல்றதுக்காக தான் இந்த பதிவு.


உடனே நான் ஆர்.எஸ்.எஸ். , பிஜெபி, வி எச் பி நு சொல்ல போறீங்க அதானே ! இது மாதிரி எந்த அமைப்புலயும் இல்லீங்க!

Sunday, June 14, 2009

பெரியாரைப் பிரிந்த அண்ணா துரை ! திக to திமுக !


பெரியார், தம் 70 ஆவது வயதில், 30 வயதுடைய நாகம்மையை திருமணம் செய்து கொண்டார். இதனை கடுமையாக எதிர்த்த அண்ணா துரை, இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக கூறி திராவிடக் கழகத்திலிருந்து வெளியறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். பிறகு, சிறிது காலம் கழித்து, கருணாநிதியும் வந்து சேர்ந்து கொண்டார் என்பது வரலாறு.

இங்க தான் நமக்கு சந்தேகம். இரண்டாவது திருமணம் என்பது அந்த காலத்தில் ரொம்ப சாதாரணமான விஷயம். நம்முடைய முப்பாட்டனுக்கு ரெண்டு மனைவிகள் இருந்த கதை எல்லாம் நமக்கு தெரியும். இந்த விஷயத்துக்காகவா, அண்ணா வெளியேறினார்? நம்பற மாதிரி இல்லையே....அதனால கொஞ்சம் தேடினேன், வரலாற்றை புரட்டிப் பார்த்தேன். எல்லா வரலாறுகளுக்கும் இரண்டு மூன்று வெர்ஷன்ஸ் இருப்பது இயல்பு. அதே மாதிரி தான் இதுவும்.

இன்னொரு தரப்பு சொல்றதையும் கேட்டு, எது உண்மை, எது பொய், நிஜமா என்னதான் நடந்துச்சுன்னு நம்ம யோசிச்சு முடிவு செஞ்சுக்கனும்.
பெரியார், அந்த காலத்திலேயே செல்வச் சீமான். ஆனால் செல்வந்தர்களுக்கே இருக்கும் கஞ்சத்தனம் அவருக்கு ரொம்ப அதிகம். சுருக்கமா சொல்லனும்னா எச்சைக் கையில் காக்காய் கூட ஓட்ட மாட்டார். இது பெரியார் அபிமானிகளுக்கு அவர் கூட இருந்தவங்களுக்கு நல்லா தெரியும்.
வயசு ஆக ஆக, பெரியாருக்கு ஒரு பயம் வந்துச்சு. அதாவது, வாரிசு இல்லாத சொத்தை நம்ம திராவிட கண்மணிகள் ஆட்டையை போட்டுறுவாங்களோன்னு பயந்தார் பெரியார். சரி, நம்மை நன்றாக கவனித்துக் கொள்ளும், மணியம்மையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்தார் பெரியார். இது குறித்து ஆலோசிக்க, அவருடைய நண்பர் ராஜ கோபாலாச்சாரியை(ராஜாஜி-பார்ப்பனன்), திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் சந்தித்து பேசினார். வாழ்நாள் முழுக்க பார்ப்பன எதிர்ப்பாளியான பெரியார், தமக்கு ஆலோசனை வழங்க எந்த திராவிட நண்பனிடமும் போகவில்லை, மாறாக பார்ப்பனனிடம் சென்றார்.

பெரியாரின் குழப்பத்தைக் கேட்ட ராஜாஜி என்ன சொன்னார்னா....."மணியம்மையை தத்து எடுத்துக் கொண்டால், அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டால், உங்கள் சொத்துக்கள் கை மாறி விடும். ஆகையால், திருமணம் செய்து கொள்ளுங்கள், உங்கள் சொத்தை அபகரிக்க முடியாது" என்று சொன்னாராம் ராஜாஜி. இது பெரியார்க்கு சரியான யோசனையாக தோன்றியது. அதன்படி ஜூலை 9,1948 இல் திநகரில் ஒரு பிராமணரின் வீட்டில் நடந்தது பெரியாரின் திருமணம். ஒரு திராவிட கண்மணிகளுக்கு கூட அழைப்பு இல்லையாம்! இப்படி செஞ்சு, பீரோ சாவியை மணியம்மையிடம் ஒப்படைத்தாராம் பெரியார். இந்த ட்ரஸ்டை தான் இப்ப கீரமணி பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார். (கொள்கைகளை அல்ல).
இதுல கடுப்பு ஆகி தான் அண்ணா திராவிட கழகத்தை விட்டு வெளியறி, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தாராம். அதன் பிறகு ஓடி வந்து ஒட்டிக் கொண்டவர் தான் கருணாநிதியாம்.
இதுல எது நம்பற மாதிரி இருக்குன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!
அண்ணா கைல இருந்து என்னவெல்லாம் ப்ளான் பண்ணி கட்சி அதிகாரத்தை கருணாநிதி பெற்றார் என்பது இதை விட பெரிய கதை. அது இன்னொரு பதிப்புல பார்ப்போம் !

Saturday, June 13, 2009

பகுத்தறிவும், போலித்தனமும்!

வலைபதிவுகளில் ஒரு கும்பல் இருக்கு, பகுத்தறிவு, பெரியார், மூட நம்பிக்கை, பார்ப்பான் அது இதுன்னு இஷ்டத்துக்கும் எழுதுவாங்க. குறிப்பா இந்து சமயத்தை தாக்கித் தான் அவங்களோட பதிவுகள் இருக்கும். இந்த கோஷ்டிகளுக்காகத் தான் இந்த பதிவு. ரொம்ப கோவக்காரராக இருந்தால் படிக்காதீங்க.


நாத்திகம், ஆத்திகம்...என்னது இது?


தைரியமா கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டா அது ஆத்திகம்
அதுவே திருட்டுத்தனமா வீட்டுலேயே கும்பிட்டா அது நாத்திகம்!

இப்படி பட்ட போலித் தனமான பகுத்தறிவு ஜீவிகள் தான் இப்ப ரொம்ப ஜாஸ்தி.


அது மட்டுமல்ல, பெரியாரே, காசி யாத்திரைக்கு சாமி கும்பிட போன போது, சாப்பாடு மடத்துல பாப்பானுக்கு தான் அனுமதின்னு சொன்னதால தான், இப்படி பார்ப்பன எதிர்ப்பு கொள்கையை ஆரம்பிச்சார்.

சரி, அப்படியாப் பட்ட பகுத்தறிவாளிகளின் கருத்துக்கள் தான் என்ன?
யார் பகுத்தறிவாளி?

கிறித்துவை கும்பிடலாம்
இஸ்லாமை பின்பற்றலாம்
இவங்க எல்லோரும் பகுத்தறிவாளிகள்.

இந்து சம்யத்தை பின்பற்றுகிறவன் மூடன், பைத்தியக்காரன்.பிற்போக்கு சிந்தனை கொண்டவன்.
ஹஹ...இது தானாயா பகுத்தறிவு?

எல்லா சமுதாயத்திலும் ஏற்றத் தாழ்வு இருக்குது. இந்து சமயத்திலும் இருக்குது. அந்த காலத்துல ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. இது கலையப் பட வேண்டிய ஒன்று தான். இதுல மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
ஆனால் நகம் வளருதுன்னு, கையையே வெட்டிப்போமா? தலை வலி வருதுன்னு தலையை வெட்டிக்கிறோமா? கிடையாதே....

அந்த காலத்துல அப்பன் செஞ்ச வேலையை தான் புள்ளையும் செய்வான். அப்பன் சவரன் செய்ரவரா இருந்தா பையனும் அதே தான் செய்வார். நீங்க எத்தன பேரு சவரன் செய்ரவங்களை மரியாதையா பாக்குறீங்க? அக்குளை தூக்கி காட்டி ஷேவ் பண்ணிக்குறதுல்ல? இப்படி காலா காலாமாக ஏற்றத்தாழ்வுகள் இருந்துச்சு. இது அவங்க அவங்க செய்கிற தொழிலை வச்சு தான் உண்டாகி இருக்கணும். இதை சரி கட்ட தான், இட ஒதுக்கீடுகள் வந்தது. இப்போழுது ஓரளவுக்கு சமூக நீதி கிடைக்குது. பெரியாருக்கு இதுல பெரும் பங்கு இருக்குங்கறது யாராலையும் மறுக்க முடியாது.

சரி. இந்த பகுத்தறிவு பேசுறவங்க கிட்ட சின்ன சின்ன கேள்விகள்.

  • எல்லோரும் ஒன்னுன்னு சொல்லிட்டு, பணம் படைத்தவனிடம் எதுக்குங்க கைகட்டி நிற்கிறோம்?
  • மூளை வேலைக்கும் ஒரு சம்பளம், உடல் வேலைக்கு ஒரு சம்பளம்னு, நம்ம அரசுகளே ஒவ்வொரு தொழிலுக்கும் ஏற்றத் தாழ்வு வச்சு சம்பளங்களை நிர்ணயிக்கராங்களே...ஏங்க?
  • நீ பெரிய ஆளா, உங்க முதலாளி பெரிய ஆளா?
  • பெரியார் பிறந்த நாளைக்கு அவர் சிலைக்கு மாலை அணிவித்து, வணக்கம் சொல்றீங்களே...ஒருவேளை பெரியாருக்கு தெரியுமோ?
  • அமெரிக்க பாஸ்போர்ட் மதிப்பா, இந்திய பாஸ்ப்போர்ட் மதிப்பா?

இந்த மாதிரி நாகரிகமான ஏற்றத்தாழ்வுகள் உங்கள் கண்களுக்கு தெரியாதா?

ஏதோ சொல்லனுமேன்னு, இந்து சமயத்தை திட்டி தீர்க்காதீங்க! அப்படி திட்டி தீர்த்த பெரியாரே, சொர்க்க வாசல் திறக்குற நாளான வைகுண்ட ஏகாதசில தான் இறந்தார்.


இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு தெய்வ பக்தி உள்ள மாநிலம், தமிழ்நாடு தான்...இனமும் தமிழினம் தான் !


"ஐயோ, என் ஜாதிக்காரனுக்கு திரோகம் பண்றாங்க...கேவலப் படுத்துறாங்கோ....உங்களை எல்லம் பார்ப்பனர்கள் ஒடுக்கி வைக்குறாங்கன்னு" அரசியல் செய்ய மட்டும் தெரியும். அதுலயும் நம்ம ட்ரஸ்டீ கீரமணிக்கு டில்லி போய் சொத்து கணக்கு பாக்குறதுக்கே நேரம் சரியா இருக்குங்க...!

என்ன சொல்ல போறீங்க.....நீ எல்லாம் நிஜத் தமிழனே இல்ல...ஆர்யன்...அரை வேக்காடு, அது இதுன்னு தானே.....சொல்லிக்கோங்க..


இனியும் போலி பகுத்தறிவை மக்கள் நம்ப மாட்டார்கள் !