Saturday, June 13, 2009

பகுத்தறிவும், போலித்தனமும்!

வலைபதிவுகளில் ஒரு கும்பல் இருக்கு, பகுத்தறிவு, பெரியார், மூட நம்பிக்கை, பார்ப்பான் அது இதுன்னு இஷ்டத்துக்கும் எழுதுவாங்க. குறிப்பா இந்து சமயத்தை தாக்கித் தான் அவங்களோட பதிவுகள் இருக்கும். இந்த கோஷ்டிகளுக்காகத் தான் இந்த பதிவு. ரொம்ப கோவக்காரராக இருந்தால் படிக்காதீங்க.


நாத்திகம், ஆத்திகம்...என்னது இது?


தைரியமா கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டா அது ஆத்திகம்
அதுவே திருட்டுத்தனமா வீட்டுலேயே கும்பிட்டா அது நாத்திகம்!

இப்படி பட்ட போலித் தனமான பகுத்தறிவு ஜீவிகள் தான் இப்ப ரொம்ப ஜாஸ்தி.


அது மட்டுமல்ல, பெரியாரே, காசி யாத்திரைக்கு சாமி கும்பிட போன போது, சாப்பாடு மடத்துல பாப்பானுக்கு தான் அனுமதின்னு சொன்னதால தான், இப்படி பார்ப்பன எதிர்ப்பு கொள்கையை ஆரம்பிச்சார்.

சரி, அப்படியாப் பட்ட பகுத்தறிவாளிகளின் கருத்துக்கள் தான் என்ன?
யார் பகுத்தறிவாளி?

கிறித்துவை கும்பிடலாம்
இஸ்லாமை பின்பற்றலாம்
இவங்க எல்லோரும் பகுத்தறிவாளிகள்.

இந்து சம்யத்தை பின்பற்றுகிறவன் மூடன், பைத்தியக்காரன்.பிற்போக்கு சிந்தனை கொண்டவன்.
ஹஹ...இது தானாயா பகுத்தறிவு?

எல்லா சமுதாயத்திலும் ஏற்றத் தாழ்வு இருக்குது. இந்து சமயத்திலும் இருக்குது. அந்த காலத்துல ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. இது கலையப் பட வேண்டிய ஒன்று தான். இதுல மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
ஆனால் நகம் வளருதுன்னு, கையையே வெட்டிப்போமா? தலை வலி வருதுன்னு தலையை வெட்டிக்கிறோமா? கிடையாதே....

அந்த காலத்துல அப்பன் செஞ்ச வேலையை தான் புள்ளையும் செய்வான். அப்பன் சவரன் செய்ரவரா இருந்தா பையனும் அதே தான் செய்வார். நீங்க எத்தன பேரு சவரன் செய்ரவங்களை மரியாதையா பாக்குறீங்க? அக்குளை தூக்கி காட்டி ஷேவ் பண்ணிக்குறதுல்ல? இப்படி காலா காலாமாக ஏற்றத்தாழ்வுகள் இருந்துச்சு. இது அவங்க அவங்க செய்கிற தொழிலை வச்சு தான் உண்டாகி இருக்கணும். இதை சரி கட்ட தான், இட ஒதுக்கீடுகள் வந்தது. இப்போழுது ஓரளவுக்கு சமூக நீதி கிடைக்குது. பெரியாருக்கு இதுல பெரும் பங்கு இருக்குங்கறது யாராலையும் மறுக்க முடியாது.

சரி. இந்த பகுத்தறிவு பேசுறவங்க கிட்ட சின்ன சின்ன கேள்விகள்.

  • எல்லோரும் ஒன்னுன்னு சொல்லிட்டு, பணம் படைத்தவனிடம் எதுக்குங்க கைகட்டி நிற்கிறோம்?
  • மூளை வேலைக்கும் ஒரு சம்பளம், உடல் வேலைக்கு ஒரு சம்பளம்னு, நம்ம அரசுகளே ஒவ்வொரு தொழிலுக்கும் ஏற்றத் தாழ்வு வச்சு சம்பளங்களை நிர்ணயிக்கராங்களே...ஏங்க?
  • நீ பெரிய ஆளா, உங்க முதலாளி பெரிய ஆளா?
  • பெரியார் பிறந்த நாளைக்கு அவர் சிலைக்கு மாலை அணிவித்து, வணக்கம் சொல்றீங்களே...ஒருவேளை பெரியாருக்கு தெரியுமோ?
  • அமெரிக்க பாஸ்போர்ட் மதிப்பா, இந்திய பாஸ்ப்போர்ட் மதிப்பா?

இந்த மாதிரி நாகரிகமான ஏற்றத்தாழ்வுகள் உங்கள் கண்களுக்கு தெரியாதா?

ஏதோ சொல்லனுமேன்னு, இந்து சமயத்தை திட்டி தீர்க்காதீங்க! அப்படி திட்டி தீர்த்த பெரியாரே, சொர்க்க வாசல் திறக்குற நாளான வைகுண்ட ஏகாதசில தான் இறந்தார்.


இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு தெய்வ பக்தி உள்ள மாநிலம், தமிழ்நாடு தான்...இனமும் தமிழினம் தான் !


"ஐயோ, என் ஜாதிக்காரனுக்கு திரோகம் பண்றாங்க...கேவலப் படுத்துறாங்கோ....உங்களை எல்லம் பார்ப்பனர்கள் ஒடுக்கி வைக்குறாங்கன்னு" அரசியல் செய்ய மட்டும் தெரியும். அதுலயும் நம்ம ட்ரஸ்டீ கீரமணிக்கு டில்லி போய் சொத்து கணக்கு பாக்குறதுக்கே நேரம் சரியா இருக்குங்க...!

என்ன சொல்ல போறீங்க.....நீ எல்லாம் நிஜத் தமிழனே இல்ல...ஆர்யன்...அரை வேக்காடு, அது இதுன்னு தானே.....சொல்லிக்கோங்க..


இனியும் போலி பகுத்தறிவை மக்கள் நம்ப மாட்டார்கள் !

5 comments:

கலையரசன் said...

அருமையா எழுதுறீங்களே...
நல்லாயிருக்கு... நிறைய எழுதுங்கள்!!

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

Thamizhan said...

என்ன அருமை!
பெயர் பொய்முகம்.
எழுதுவது பொய்யும்,புரட்டும்.
பொறந்ததும் வைகுண்ட ஏகாதேசியோ?
இந்தியாவின் சுவிஸ் வங்கி காஞ்சி காமம் கேடியின் ஏஜண்ட் மாதிரி இருக்கிறது,எழுத்து.
கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லை.
இதிலே எந்தக் கடவுளும் அடங்கும்.
நான் ஏன் கிருத்துவன் அல்ல" என்ற பெர்ட்ரண்டு ரஸ்ஸல் புத்தகத்தை அந்தக்காலத்திலேயே மலிவுப் பதிப்பாய் வெளியிட்டவர் பெரியார்.
திருச்சி பெரியார் வளாகம்,தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்
இந்தியாவின் சுவிஸ் வங்கியால் அல்ல தொண்டர்களின் நன்கொடையும்,வங்கிக் கடனும்
தான் ஒவ்வொரு கல்லும்.
சென்று பார்க்கவும்.
பொய்சொல்பவன் எல்லாம் பெரிய மனிதனாகிறான் என்று பொய் சொல்லாதீர்கள்,கொஞ்சம் உண்மை பேசுங்கள்,முகம் பொய்யாக இருக்கலாம்,வார்த்தையும் எழுத்தும் வேண்டாம்.

ராமய்யா... said...

//தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் //

How much they are asking donation for seats tamilan? can you find that.. How much for nathigan and for athigan?

Thamizhan said...

அப்பா!ராம்ஜி,நீர் கொஞ்சம் யோக்யம்.கேள்வியாவது கேட்டுள்ளீர்.பொய் முகம் மாதிரி அவிழ்த்து விடாமல்.
அங்கு எல்லோருக்கும் ஒரே மாதிரிதான்.
அங்கு படித்தப் பார்ப்பன பொறியியல் பட்டதாரிப் பெண்கள் அமெரிக்கா,சிங்கப்பூர்,ஆஸ்டேரிலியா என்று வேலை செய்கிறார்கள்.அவர்களையே கேளுங்கள்.
கொஞசம் போய் பார்த்து வாருங்கள்,நல்ல படியாக் உங்களை வரவேற்று அனைத்துக் கேள்விகளுக்கும் உண்மையான் பதில் அளிப்பார்கள்.
pmu.org பாருங்களேன்.திறந்த புத்தகம்.

Post a Comment