இது இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கான பதிவு.
எங்க போய் இந்து சமயத்தைப் பற்றி பேசினாலும், வேற்று சமயத்தவர்கள் மற்றும் நாத்திகர்கள் கூறும் குற்றச்சாட்டு சாதி உயர்வு தாழ்வு பேதங்கள் இருப்பதைத் தான் குறையாக கூறுவார்கள். சாதியைப் பற்றி அலசுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. அது நாத்திகர்கள் மற்றும் திராவிட இயக்கங்களின் வேலை. மற்ற சமயத்தவரை புன்படுத்துவதோ, காயப்படுத்துவதோ இந்தப் பதிவின் நோக்கமல்ல. பல சூழ்ச்சிக்காரர்களால் பிரிக்கப்பட்டு இருக்கும் இந்து சமய மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியே இந்தப் பதிவின் நோக்கம்.
இதுக்கு இப்போ என்ன அவசியம் வந்துச்சுன்னு நீங்க கேக்கலாம். வெள்ளைக்காரன் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டான் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் ஒன்று இந்து, முஸ்லிம் என பிரித்து நம் நாட்டை அடைய நினைத்தது. மற்றொன்று, இருக்கிற சாதி வேறுபாடுகளை பெரிதுபடுத்தி, இந்துக்களின் ஒற்றுமையை உடைத்தெறிந்து, நாட்டைத் துண்டு போட திட்டம் தீட்டியது.
ஒரு காலக் கட்டத்தில் பிராமண சமுதாயம் மற்ற சமுதாயங்களின் மீது ஆதிக்கம் செலுத்தின என்பது யாரும் மறுக்க முடியாது உண்மை. அதனுடைய விளைவு தான் மதமாற்றம். இதில் பிராமண சமுதாயத்தை மட்டும் சொல்ல முடியாது, உயர் சாதி என சொல்லி கொள்ளும் பல சாதிகள் தாழ்த்தப்பட்ட மக்களையும், பழங்குடி மக்களையும் தாழ்வாக நினைத்து அவர்களை தனிமைப்படுத்துவதும் இது போன்ற மதமாற்றங்களுக்கு காரணம்.
மனமாற்றத்தின் காரணமாக மதம் மாறுவது என்பது அவரவர் தனிப்பட்ட் உரிமை. அதனைத் தடுப்பது நமது நோக்கமல்ல. பொதுவாக, பெரும்பான்மையாக கிறித்துவத்திற்கு மாறுபவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தான். அதுவும் அந்த சமயத்தின் மீது ஈடுபாடு கொண்டு மதமாறுபவர்கள் அல்ல. ஒரு சமூக அந்தஸ்திற்காக மதம் மாறுபவர்களே அவர்கள். அதுமட்டுமல்லாமல், பணம் கொடுத்து மதம் மாற்றம் செய்வது, மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்பவர்கள், இவற்றையே தொழிலாக கொண்டு இயங்கும் Evangelistகள். இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மேற்கத்திய நாடுகள். தொண்டு என்கின்ற பெயரில் உள்ளே நுழைந்து, அனைவரையும் கிறித்துவராக மாற்றுவதே அவர்களின் குறிக்கோள். இது அனைவருக்கும் தெரியும்.
நிலைமை இப்படி இருக்க, நம் சமயத்தில் இருப்பவரை சாதி சொல்லி பழித்து, உயர்வு தாழ்வு பார்த்து, நாமே நம்முடைய சமயத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறோம். இது ரொம்ப உச்ச கட்ட நிலைமை. நம்முடைய சமயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதே மதவாதம் என்று சொல்லும் அளவுக்கு மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சிகள் நனவாகிக் கொண்டிருக்கிறது. வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவோம். தலித், பிராமணன், முதலி, பிள்ளை, தேவர், நாடார், செட்டியார், வன்னியர்,உடையார் என அனைவரும் ஒன்றுபடுவோம். நம் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவோம்.
இந்தியாவின் கலாச்சாரம் என்பது இந்துக் கலாச்சாரமே. இந்தியாவின் கலாச்சாரம் மட்டுமல்ல, தமிழனின் தொன்று தொட்ட கலாச்சாரமும் இந்துக் கலாச்சாரம் தான். பெரியாருக்கு பிறகு வந்த கலாச்சாரம், திராவிட கழக கலாச்சாரம். தமிழ் கலாச்சாரம் கிடையாது. பெரியார் கூட, தாழ்த்தப்பட்டவங்க எல்லாம் வேறு சமயம் மாறனும்னா, இஸ்லாமுக்கு மாறுங்கள். கிறித்துவத்திற்கு வேண்டாம். ஏனென்றால், கிறித்துவத்திற்கு மாறினாலும், சாதி ஒழியாது, நீங்கள் இந்துவாகவே இருப்பீர்கள் என்று சொன்னார். அதற்கேற்றார் போல, மாதா கோவிலுக்கு கற்பூரம் காட்டுற அளவுக்கு நம்ம ஊர் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி, மதமாற்றம் செய்து வருகிறார்கள். உலகளவில், இந்தியாவின் பெருமையே நம் கலாச்சாரங்கள் தான். அது தொலைந்து போக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது. இதற்கு எல்லோருமே ஒன்றினைந்து தான் செயல்படனும். அதற்கான முதல் படியை நாம் தான் எடுத்து வைக்க வேண்டும்.
ஒவ்வொருவர் செய்யும் தொழிலை வைத்து வகுக்கப்பட்டது தான் சாதி. அதை மனிதன் தன் சுய நலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டு, சமயத்தின் மீது சாயலைப் பூசுகிறான். கல்வியறிவு, மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் சாதி அழியத் தொடங்கி இருப்பது நம் சமயத்திற்கு நல்லதே ! இனி சாதி வைத்து உயர்வு தாழ்வு பார்ப்பதை விட்டொழிக்க வேண்டும் !
இதில் பெரும்பாலும் நம் சமயத்தை வம்புக்கு இழுப்பவர்கள் திராவிட கழகத்தினர். இந்துக்களைத் தவிர, கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாம் அதனுடைய அங்கத்தினர்கள். ஆகையால் தூற்றுவோர் அனைவரும் நாத்திகர்கள் அல்ல, வேற்று சமயத்தினர் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதனுடைய பின்னூட்டங்களில் கூட பெயர் வித்தைகள் காட்டுவர். நம் சமயத்திற்குள்ளேயே சண்டையிட்டுக்கொள்ள வேண்டும் என்பதே சிலரின் எண்ணம். அதற்காக, உணர்ச்சி வசப்பட்டு, நமக்குள்ளேயே சண்டை போட்டு கொள்வது, நாம் ஏமாறுகிறோம் என்றே அர்த்தம். ஆகையால், சூழ்ச்சிகளுக்குள் சிக்காதீர்கள். இது நம் சமயத்தைப் பற்றிய ஒரு Self-Introspection.
பல இடங்களில், பல விதமாக பேசி ஏளனம் செய்து, சமயத்திற்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரம் செய்யும் கைக்கூலிகளை அவர்கள் வழியிலேயே சென்று தான் பாடம் புகட்ட வேண்டும். வெளிப்படையாக பேசுவதன் மூலம் ஏதாச்சும் நன்மை வராதான்னு ஒரு ஆசை தான். அன்பையும், சிறந்த வாழ்க்கை நெறியையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித இனத்துக்கு சொல்லி வழிகாட்டிய நம் சமயத்தை நாமே அழிவுக்கு கொண்டு சொல்கின்றோமோ என்ற வேதனை தான். இப்படி பேசுவது ஒரு மதவாதி போல உங்களுக்கு தோன்றினால், காந்தியடிகள், சர்தார் வல்லபாய் படேல், கோபால கிருஷ்ண கோகுலே, பாரதியார், ஜெய்பிரகாஷ் நாராயன் என அனைவரும் மதவாதிகள் தான். தம் சமயத்தைப் பற்றி, தம் மக்களின் நலன்களைப் பற்றிப் பேசுவது மேற்கத்திய சமயங்களுக்கு மதவாதி போல தோன்றினாலும், கவலை இல்லை.
இவற்றை எல்லாம், மத மாற்ற தடை சட்டம் போட்டு தடுத்து நிறுத்துவதைக் காட்டிலும், நம் மனங்கள் மாறி அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து நடந்தால், இது போன்ற சூழ்ச்சிக் கூட்டங்கள் தானாக ஓடி விடும்!
அப்புறம், டேவிட், ஜேம்ஸ் நம்முடைய பழைய கந்தசாமியாகவும், ராமசாமியாகவும் திரும்பி வருவர் என்பதில் ஐயமில்லை!
Saturday, September 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
எண்ணம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், சொல்லியது பொருந்தவில்லை.
முதன்முதலாக, பாரதி போன்றோரிடமிருந்து நீங்கள் மாறுபடுகிறீர்கள்.
அவர்கள் - இந்தியக்கலாச்சாரம் என்பது, மகமதியரையும் கிருத்தவரையும் உள்ளடக்கிய ஒன்று. அதைக்கட்டிக் காப்பது, அவர்கள் கடமையும் கூட என்றனர்.
நீங்களோ, இந்தியக்கலாச்சாரம் என்பதை, உங்கள் மதத்தைமட்டுமே அடியொட்டிய ஒன்று என்றும், மற்ற இரு மதத்தவரை இந்து மதத்திற்கு கொண்டுவருவதுபற்றியும்தான்... என நினைக்கிறீர்கள்.
சேட்டா...பாரதியை எப்போது சரியாகப் படிக்கப்போகிறீர்கள்?
நிற்க.
நீங்கள், பழையபண்டைக்காலத்தில் இருக்கிறீர்கள். எவ்வளவுதான் மதமாற்றச்சூழ்ச்சிகள் என்று நீங்கள் எழுதினாலும். இன்றைய நிலையை நீங்கள் திரித்துப்பார்க்கிறீர்கள்.
அது என்ன?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இவ்விருமத மக்களும் இந்தியாவில் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் தலைமுறைதலைமுறையாக இம்மதங்களைக்கடைபிடித்து வாழ்கின்றனர். அவர்களை எல்லாம் நீஙகள் இந்துவாக மாற்றிவிட முடியாது.
உங்கள் மதத்திலிருந்து உஙகளுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். அவர்கள் மதங்களிலிருந்து அவர்களுக்கு கிடைக்கிறது. அவர்களைப்பார்த்து நீங்கள் ஏன் வயிறு எரிகிறீர்கள்?
ஏன் எல்லாரும் அவரவர் மதங்களில் இருந்து கொண்டே இந்திய கலாச்சாரத்தைப் பேணக்கூடாது?
கவலைப்படாதிர்கள்..பெண்கள் WESTERN DRESS போடக்கூடாது எனபதில் இந்தியர்கள் அனைவரும் ஒன்று. இந்தியக்கலாச்சாரத்தில் ஒரு பெண் எப்படியிருக்கவேண்டும் என்பதில் இசுலாமியருக்கும் கிருத்தவருக்கும் உஙகளுக்கும் வேறுபாடு இல்லை. Articel 377 gay marraige etc. இதிலும் அனைவரும் ஒன்றுதான்.
இவைகள் ஒரு சில எடுத்துக்காட்டுகள்.
எல்லாரும் ஒன்றாக வாழமுடியும் நம் கலாச்சாரத்தைக் காப்பாற்ற முடியும். அனைவரும் ஆரியரே - என்று அடித்துச்சொன்னார் பாரதி.
படிச்சதுண்டோ அவ்விட?
எழுதியவைகளின் நிறைய கருத்துப்பிழைகள். கொஞம்தான் சொன்னேன்.
"நீங்களோ, இந்தியக்கலாச்சாரம் என்பதை, உங்கள் மதத்தைமட்டுமே அடியொட்டிய ஒன்று என்றும்"
இதுல என்ன மாறுபாடு தோன்றுகிறது என்று எனக்கு புரியவில்லை. முகலாய ஆட்சிக்கு பிறகு இந்தியா வந்தது தான் இஸ்லாம், ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு இந்தியா வந்தது தான் கிறித்துவம். ஆனால் இந்தியாவிலேயே இருந்தது தான் இந்து சமயம். அப்படியென்றால் அந்த கலாச்சாரம் என்ன கலாச்சாரம் நண்பரே ?
"அவர்களை எல்லாம் நீஙகள் இந்துவாக மாற்றிவிட முடியாது."
மதமாற்றம் செய்வது, மதத்தை திணிப்பது, என்னை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று சொல்வது, நான் மட்டும் தான் கடவுள் என்று சொல்வது இந்து சமயம் கிடையாது. ஆகையால், மதமாற்றம் செய்வது நம் நோக்கமல்ல. அடுத்தவர் சமயத்தில் மூக்கை நுழைக்கும் சூழ்ச்சிக்கார Evangelistகளிடமிருந்து, எம் மக்களை காப்பாற்றுவதே நோக்கம்.
"ஏன் எல்லாரும் அவரவர் மதங்களில் இருந்து கொண்டே இந்திய கலாச்சாரத்தைப் பேணக்கூடாது?"
எந்த சமயத்திலிருந்தும் இந்தியக் கலாச்சாரத்தைப் பேணலாம். எங்கள் சமய குடும்பப் பிரச்சினையான சாதியை கலைய வேண்டும், சமயத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதையே சொல்லி இருக்கிறேன். உங்கள் சமயத்தை நீங்கள் பின்பற்றுங்கள். இதில், கருத்து வேறுபாடு இல்லை. அதில் மாறுபாடு கிடையாது. ஒன்றும் தெரியாத அப்பாவிகளை, கோர்ட் சூட் போட்டுகிட்டு ஏமாத்துற கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பது தான் என் கருத்து.
"எழுதியவைகளின் நிறைய கருத்துப்பிழைகள். கொஞம்தான் சொன்னேன்."
எழுத்துப் பிழை இருக்கிறது ஒப்புக் கொள்கிறேன் நண்பரே!
//இதுல என்ன மாறுபாடு தோன்றுகிறது என்று எனக்கு புரியவில்லை. முகலாய ஆட்சிக்கு பிறகு இந்தியா வந்தது தான் இஸ்லாம், ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு இந்தியா வந்தது தான் கிறித்துவம். ஆனால் இந்தியாவிலேயே இருந்தது தான் இந்து சமயம். அப்படியென்றால் அந்த கலாச்சாரம் என்ன கலாச்சாரம் நண்பரே ?//
இன்று வாருங்கள். அக்காலத்திற்கு போனால் அப்படித்தான்.
தமிழரா? தமிழ்நாட்டைவிட்டு வெளியே போனதுண்டா?
முடிந்தால், வடமானிலங்களில் ஒரு ரவுண்டு வாருங்கள்.
அங்குள்ள இந்துக்கள், இசுலாமியரைப்போலத்தான் இருப்பார்கள். இசுலாமிய்ரின் கலாச்சாரமும் இந்துக்களின் கலாச்சாரமும் பிணைந்திருக்கின்றன அங்கே. இன்று! இப்போது! இப்படி! என்பதுதான் நான் சொல்ல வருவது.
தமிழ்நாடு தனியே என்றும் இருந்தது. பிற கலாச்சாரதாக்கம் இங்கு இப்போதுதான் வந்துள்ளது. 75 வருட்ஙகளுக்குமுன் சென்னை தமிழரின் தலைநகரம். ஆனால், இன்று மக்களின் கலாச்சாரம் கூட்டாஞ்சோறுபோலாகிவிட்டது.
இதே நிலையை வடநாட்டுக்கலாச்சாரம் என்றோ அடைந்துவிட்டது.
கிருத்தவர்கள் அங்கு எங்கும் நீக்கமற நிறையவில்லை. ஆனால், இசுலாமியர்கள் பட்டிதொட்டியெங்கும் உள்ளார்கள். எனவே, அங்கு நீஙகள் காண்பது கூட்டுக்கலாச்சாரம்.
இதுவே இந்தியகலாச்சாரம் என்பது என் வாதம். அதை ஏற்காமல் போனால், உங்களுக்கு நான் சொல்வது, குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டாமல், வடநாடு யாத்திரை போய்வாருங்கள் எனத்தான்
சொல்லமுடியும்.
//மதமாற்றம் செய்வது, மதத்தை திணிப்பது, என்னை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று சொல்வது, நான் மட்டும் தான் கடவுள் என்று சொல்வது இந்து சமயம் கிடையாது. ஆகையால், மதமாற்றம் செய்வது நம் நோக்கமல்ல. அடுத்தவர் சமயத்தில் மூக்கை நுழைக்கும் சூழ்ச்சிக்கார Evangelistகளிடமிருந்து, எம் மக்களை காப்பாற்றுவதே நோக்கம்//
இதைப்பற்றி நான் எழுதவில்லை. நான் சொல்வது கலாச்சாரத்தைப்பற்றி.
இன்றையகலாச்சாரம், நீங்கள் மனதில் வடித்துவைத்துக்கொண்டு எழுதும் கலாச்சாரம் அல்ல என்பதே.
உங்கள் மக்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நான் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. அது உங்கள் வலிமையையும் அறிவையும் (ability to counter your enemies with appropriate strategies) பொறுத்தது. Best of luck, என்றுதான் வாழ்த்தலாம் நான்.
நிற்க.
நீஙகள் பாரதியைப்பற்றி தப்பாக எழுதியிருக்கிறீர்கள். அதைப்பற்றி ஏன் ஒன்றும் சொல்லவில்லை? எப்போது வாபஸ் வாங்கபோகிறீர்கள்? இல்லயென்றால், அவர் எழுதியதை என் வலைபதிவில் போடப்போகிறேன். படிக்கிறேளா? தற்சமயம் பாரதியைப்பற்றித்தான் எழுதிக்கொண்டு வருகிறேன்.
அப்புறம் சுவாமி (பெரியோர்களை இந்துக்களாகிய நாங்கள் விளிக்கும் வழக்கம். நீங்கள் எப்படி சுவாமி?), என்னை எப்படி கிருத்தவ்னாகவோ, இசுலாமியனாகவோ, நினத்துக்கொண்டீர்கள்?
உஙகளுக்கு ஒரு கருத்திருக்கும். மற்றவருக்கு மாற்று கருத்திருக்கும். மாற்றுக்கருத்து உள்ளவரெல்லாம், கிருத்தவராகவே, இசுலாமியராகவோ இருப்பார் என எப்படி நினைக்கலாம்?
"சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said... "
வட மாநிலங்களும், வெளி நாடுகளிலும் சில காலம் வசித்திருக்கிறேன். வட மாநிலத்தில் இருவரும் சப்பாத்தி சாப்பிடுவதால், தங்களுக்கு இருவரும் ஒரே கலாச்சாரமாகத் தெரிகிறது போலும் ! சரி, கலாச்சாரம் என்பது ஒரு பெரிய தலைப்பு. உடை,மொழி,உணவு மட்டும் கலாச்சாரமில்லை ! அதை அடுத்த இடுகையில் விவாதிப்போம்.
பாரதிக்கு வருவோம். மிகவும் ஆழமாக அவரது நூல்களைப் படிக்காவிட்டாலும், அவ்வப்போது, எட்டி மட்டும் பார்ப்பதுண்டு. அதன் மூலம் விளக்கம் சொல்ல முயற்சிக்கிறேன்.
பாரதியார் பாடிய பாடல்களில், பெரும்பாலான பாடல்கள் இந்து சமயத்தையும், இந்திய உணர்வையும், கலாச்சாரத்தையும் ஒன்றினைத்தே பாடி இருக்கிறார்.
உதாரணமாக,
கண்ணன் பாட்டு - கண்ணனை இன்றைய (கலாச்சாரத்து) ஆணாக பாவித்து பாரதியார் எழுதியது.
கண்ணம்மா பாட்டு -கண்ணனை இன்றைய(கலாச்சாரத்து) பெண்ணாக பாவித்து பாரதியார் பாடியது
பாஞ்சாலி சபதம் - இந்து சமயத்தின் இதிகாசமான, மகாபாரத்தை மையமாகக் கொண்டு பாரதி பாடியது.
ஆக அவருடைய பெரும்பான்மையான பாடல்களில் இந்து சமயமும், இந்திய உணர்வையும் கலந்தே பாடியிருக்கிறார்(Hindu Spirituality and Indian Nationalism).
இந்த மொத்த பதிவின் விளக்கத்தை இரண்டே வரியில் பாரதி பாடியது
ஆயிரம் உண்டிங்கு சாதி,
எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி!
இந்த மாதிரி இப்பொழுது யாராவது எழுதினால், காவிக்காரன் என்று தான் சொல்வார்கள்.
அதுமட்டுமல்ல, நம்ம ஊர் திராவிட இயக்கங்கள் பாரதியைப் புறந்தள்ளி, அவரின் அடிமையான பாரதிதாசனை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதன் அர்த்தம் எதற்கென்று கண்டுபிடியுங்கள், பிறகு வேண்டுமானால், பாரதியை என் பதிவில் இருந்து வாபஸ் வாங்குகிறேன்!
"உஙகளுக்கு ஒரு கருத்திருக்கும். மற்றவருக்கு மாற்று கருத்திருக்கும். மாற்றுக்கருத்து உள்ளவரெல்லாம், கிருத்தவராகவே, இசுலாமியராகவோ இருப்பார் என எப்படி நினைக்கலாம்?"
மன்னிக்கவும். மாற்றிக் கொள்கிறேன்!
நன்றி!
weldon my dear friend.........u r telling 100% truth..........namathu mathathqi naam kaka ninaithal athai eppadiyavathu thirithu matha saayam adikka kaathirukkum thiravida,kiruthuva....ECHHIKKALAI patti kavalai kollamal ungal paniyai thodaravum
நன்றி சுபாஷ்!
Brother
A few clarifications.
Islam has its roots even before the mughals came into India. It was kerala where Islam came to India and that too during the prophets period(1500 years back). There are enough evidences for that.
And more importantly, out of curiosity and not out of pride towards islam or prejudice against hinduism, I would like to ask you few questions.
Where did you get the word 'Hindu' from?
Can you tell me if the word 'Hindu' existed thousand years back? Do you have proof?
Note: Swami Vivekananda has an answer for that.
Before the spread of Buddhism, was the religion followed by the people in villages(especially the poor and downtrodden) and those in the cities same? Was there a religion called 'Hinduism'? I know for sure there were separate religions Saivism and Vaishnavism during the Budhdha's period. And was it equivalent to the worship of 'Kaaval Deivangal'/'Naattaar Deivangal'?
- A Muslim.
வாணிபத்திற்காக வருவது என்பது வேறு. இஸ்லாம் பரவியது என்பது வேறு. நான் படித்த வரை முகலாயர் ஆட்சி காலத்துக்கு முன்பு இஸ்லாமியர் நம் நாட்டில் இருந்ததாக சரித்திரங்கள்/காவியங்களோ/இலக்கியங்களோ கூறியதாக நினைவில்லை.
"Where did you get the word 'Hindu' from?
Can you tell me if the word 'Hindu' existed thousand years back? Do you have proof? "
இந்து என்ற வார்த்தை மட்டும் தான் நீங்கள் சொல்லும் காலத்தில் இல்லை. அது ஆங்கிலேயருக்கு பிறகு வந்தது. சிவனை வழிபடுதல், விஷ்ணுவை வழிபடுதல் என்பது கிமுவில் எழுதப்பட்ட இலக்கியங்ககளிலே காணலாம்.
உலகில் இரு சமயங்கள் தான் மூதாதையர்கள். ஒன்று இந்துயிசம், மற்றொன்று ஜூடாயிசம். இந்துயிசத்திலுருந்து தோன்றியவை தான் சைவம், பௌத்தம், சமணம் போன்றவை. ஜூடாயிசத்திலிருந்து தோன்றியவை தான் கிறித்துவமும், இஸ்லாமும்.
"And was it equivalent to the worship of 'Kaaval Deivangal'/'Naattaar Deivangal'?"
காவல் தெய்வங்கள்/ஐயனார்/மதுரை வீரன் போன்ற தெய்வங்கள் அந்த ஊர் மக்களுக்காக போராடிய நல்ல மனிதர்கள். கடவுள் தங்களைக் காப்பாற்ற அவர்களை அனுப்பி வைத்ததாக நம்பி வழிபடுவகிறார்கள். (தூதர்கள் என்று கூட சொல்லலாம்). இப்படி உருவானது தான் நீங்கள் கூறும் காவல் தெய்வங்கள்/நாட்டார் தெய்வங்கள்/கன்னி தெய்வங்கள் எல்லாம். கடவுள் என்று நினைத்து வழிபட்டால், அது அவருக்கு சென்றடையும் என்பது நம்பிக்கை. இதில் சிறியவர் பெறியவர் என்று யாருமில்லை. மலை உச்சியில் தோன்றுகிற ஊற்று, வெவ்வேறு இடங்களில் ஆறாகப் பிரிந்து ஓடினாலும், கடைசியில் கடலுடன் தான் இணையும்.
தங்கள் கருத்திற்கு நன்றி!
//காவல் தெய்வங்கள்/ஐயனார்/மதுரை வீரன் போன்ற தெய்வங்கள் அந்த ஊர் மக்களுக்காக போராடிய நல்ல மனிதர்கள். கடவுள் தங்களைக் காப்பாற்ற அவர்களை அனுப்பி வைத்ததாக நம்பி வழிபடுவகிறார்கள்.//
இவைகள் இந்து தெய்வஙகள் என அழைக்கப்படுமா?
பாபர் வந்தது 1824. அதிலிருந்து முகலாயர் வந்ததாகக்கொள்ளலாம்.
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள்.
இதற்கு முன் இங்கு ஒருவர் குறிப்பட்டதைப்போல, அரபி வணிகர்கள் கேரளக்கரைக்கு வந்தபோது, அவர்களிடம் பண்டமாற்றம் செய்த சேரமன்னன் மகமதியன் ஆனான் என்றும் பின்னர் ஹஜ் யாத்திரை மேற்கொண்டான் என்றும் அதற்குப்பின்னர் இசுலாம் கேரளத்தில் வேறூன்ற ஆரம்பித்தது என்றும் வரலாறு.
கிறுத்தவத்தைப் பார்க்கும்போது, தாமசு வந்தாரா இல்லையா என்று இந்துத்தவாவினர் வாதம் பண்ணினாலும், பிரான்சிசு சேவியர் வந்தார், கோவாவின் முதலில், பின்னர் தமிழகத்தில். இதை மறுக்கவில்லை. இன்றும் அவர் பூதவுடல் பொம் ஜீசசு தேவாலயத்தில் (கோவாவில்) பாதுகாக்கப்பட்டு வந்து, பத்தாண்டுக்கொருமுறை பொதுமக்களுக்காக காட்டப்படுகிறது என்பதையும் யாரும் மறுக்கவில்லை. சேவியர் போன்றோர் ஆங்கிலேயருக்குமுன்னரே வந்தனர்.
ஆனால், இப்பதிவாளர், கிறுத்தவர் வருகையை, ஆங்கிலேயர் காலத்தில் வந்த மிசுனோரிகளிடமிருந்தே கணக்கிடுகிறார். மகமதியரை, முகலாயரிடமிருந்து கணக்கிடுகிறார் - அப்படி செய்யினும் கூட 2000 ஆண்டுகளுக்கும் மேலல்லவா ஆகிறது?
இப்பதிவாளர், தன் பதிவின் இறுதியில், அனைவரும் ஒன்று கூடி அனைத்து வேறுபாடுகளையும் புதைத்து இந்துக்களாக ஒன்றாகுவோம் என அறைகூவல் விடுகிறார். இதை நான் என் முதல் பின்னூட்டத்தில் முதல் வரியிலே well done என்று சொல்லிவிட்டேன்.
சாதிகளைப்பற்றி பேச மறுக்கிறார். பதிவுளுள்ளேயே அவர் வரிகள் இருக்கின்றன.
இவருக்குத் தெரியுமா?
சாதிகள் வரக்காரணமாயிருந்த வருணக்கோட்பாடு இந்துமதத்தின் அடிப்படை ஆணிகளில் ஒன்று. அது இன்றுவரை நிராகரிக்கப்படவில்லை.
மேலும், அது சரி என்றும், இன்றைய சமூகம் தத்தம் வருணத்தில் வாழாமல் பிறண்டதனால் சமூகம் கெட்டுக்குட்டிச்சுவாரனது என்றும் வாதிடுகிறார்கள் இந்துக்கள்.
சின்னாட்களுக்குமுன், செயமோகன் வருணக்கொள்கை ஏன் புதுப்பிக்கப்படவேண்டும் என வாதிட்டு பதிவுபோட அது எல்லாருக்கும் சொல்லப்படுகிறது. வளைபதிவாள இந்துக்கள் கைதட்டுகிறார்கள்.
எப்படி இந்துக்கள் ஒன்றாக முடியும்? இன்னாட்டில் 30 கோடி தலித்துகள் வாழ, அவர்களைத் தாழ்த்தும் இக்கொள்கை சரியென்றால், அவர்கள் அனைவரும் ஏன் இந்த மதத்தில் இருக்கவேண்டும்?
இறைவனின் உடலில் நான்வருணத்தார் மட்டுமே பிறந்தனரென்றும் அவர்களே அவனைத்தொழுதேத்தி நலம்பெறமுடியுமென்றும், வருணங்களுக்கு அப்பால் வருணமே இல்லாத நீங்கள் எங்கள் இறைவனிடம் வரமுடியாதென்றும், அப்படியே வரவேண்டுமெனில் நீஙகள் பல்பிறவிகளில் நல்வாழ்க்கை வாழ்ந்துகாட்டவேண்டுமென்றும், முற்பிறப்பில் நீவிர் செய்த கெட்டவாழ்க்கையினால் நுமக்கு இவ்விழிந்த பிறப்பென்றும் சொல்லி அவர்களை கடையனுக்கும் கடையன் என்றால் அவர்கள் ஏன் இந்துக்கடவுளை ஏற்றுக்கொள்ள வேண்டும்? இக்கொள்கையை இன்றுவரை சரியென்று சொல்லிக்கொண்டும் எழுதிக்கொண்டும் கைதட்டிகோண்டும் இருக்கிறார்களே? இது தெரியுமா தெரியாதா இப்பதிவாளருக்கு? இல்லயென்றால், செயமோகன் பதிவுக்குச் சென்று படிக்கவும்.
"சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...
//காவல் தெய்வங்கள்/ஐயனார்/மதுரை வீரன் போன்ற தெய்வங்கள் அந்த ஊர் மக்களுக்காக போராடிய நல்ல மனிதர்கள். கடவுள் தங்களைக் காப்பாற்ற அவர்களை அனுப்பி வைத்ததாக நம்பி வழிபடுவகிறார்கள்.//
இவைகள் இந்து தெய்வஙகள் என அழைக்கப்படுமா? "
ஹாஹா...சாதியை ஒழித்தே ஆக வேண்டும். அதுவே சமயத்துக்கு சிறந்தது என பதிவில் சொல்லி இருக்கிறேன். நீங்கள் சமயத்தை ஆராயும் பொருட்டு கேள்வியை கேட்கிறீர்.
சரி சொல்லுகிறேன். அதைத் தான் அவரே சொல்லிவிட்டாரே காவல் தெய்வங்கள் என. இவைகள் தெய்வங்கள் தான்.
உங்களுடைய கேள்விக்கு மிகப் பெரிய ஆன்மீக பதில் தான் கொடுக்க வேண்டும். அதைத் தெளிவுபடுத்த தனிப் பதிவிடுகிறேன்!
பாரதியைப் பற்றி இப்பதிவாளரின் கருத்தென்னவென்றால்,
“பாரதியைப்பொறுத்தவரை, இந்துக்கலாச்சாரம் என்றால் அஃது இந்துசமயக்கலாச்சாரமே; அதில், மகமதியருக்கும், கிறுத்தவருக்கும் இடமில்லை. அக்கலாச்சாரமே இந்தியாவில் இருக்கவேண்டும். அஃதாவது, இவ்விருமதத்தவருக்கும் தம்மை இந்தியர்கள் எனச் சொல்லிக்கொள்ள உரிமையில்லை - என்று பாரதியின் பாடல்களில் கண்டேன் என எடுத்துக்காட்டுகிறார் இப்பதிவாளர் எனக்கு இட்ட பதிலில்.
இதை நான் மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. ஏனென்றால், நான், பாரதியைப் பற்றி இன்னும் பல புதியவிடயங்களை, இப்போதுத்தான் தெரிந்துகொண்டு வருகிறேன்.
இப்பதிவாளர் போன்றோருக்காக பாரதியின் எழுத்துகளை பதிவிட்டுக்கொண்டுவருகிறேன். முற்றிலும் செய்தபின்,
பாரதி - யார்?
என அவர் எழுத்துக்கள் மூலம் துணிவேன்.
எனவே, தற்சமயம் என்னிடமிருந்து பாரதியைப்பற்றி வாதம் இல்லை.
//உங்களுடைய கேள்விக்கு மிகப் பெரிய ஆன்மீக பதில் தான் கொடுக்க வேண்டும். அதைத் தெளிவுபடுத்த தனிப் பதிவிடுகிறேன்!//
அப்பதிலில், அத்தெய்வங்களை ஏன் பார்ப்பனர்கள் வணங்குவதில்லை என்றும் சொன்னால் நலம்.
மேலும், நண்பரே, அவையனைத்தும் காவல் தெய்வங்கள் அல்ல. அவைகளுல் பல, முதல் தெய்வங்கள் ஆகும். மதுரைத்தேவமாருக்கு, கருப்பசாமி குலதெய்வம். முதல் தெய்வம். வெறும் காவல் தெய்வமல்ல.
இப்படி பலவூர்களில் காணலாம். முற்காலத்து வாழ்ந்த மனிதர்கள் என்று எல்லாத்தெய்வங்களுக்கும் பொத்தாம்பொதுவாக சொல்லிவிட முடியாது.
"சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...
இது தெரியுமா தெரியாதா இப்பதிவாளருக்கு? இல்லயென்றால், செயமோகன் பதிவுக்குச் சென்று படிக்கவும்."
நண்பரே....சாதியை ஆராய்ச்சி செய்வது நாத்திகர்களின் வேலை, சாதியைக் கொண்டு மக்களைப் பிளவு படுத்துவது பெரியார் திராவிட இயக்கத்தின் வேலை, நாங்கள் சாதியை ஒழித்து ஒன்று சேர விரும்புகிறோம். அது பலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எங்களுக்கு தெரியும். எப்படி எதையெல்லாம் உடைத்து ஒன்று சேர முடியுமோ அதை செய்வோம்.
ஹாஹா...காசியில் ராமசாமிக்கு மட்டும் நம்ம பிராமணர்கள் ஒரு வேலை சோறு போட்டு இருந்தாங்கன்னா..இப்படி எல்லாம் இந்து சமயத்தை அழிக்க கிளம்பி இருக்க மாட்டாங்க...
பெரியார் காலத்துல - பிராமணர் Vs பிராமணர் அல்லாதவர்
இப்போது - இந்துக்கள் Vs இந்து அல்லாதவர்
எல்லாத்துக்கும் ரெடி பாஸ் நாங்க : )
"சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...
பாரதி - யார்?
என அவர் எழுத்துக்கள் மூலம் துணிவேன். "
அப்படியே அந்த பெரியார் திராவிடர்கள்
பாரதியாருக்கு ஆப்பு
பாரதிதாசன் தான் டாப்பு
என்பது போல சொல்றாங்களே...அதையும் ஏன்னு தெரிஞ்சு சொல்லுங்க..! : )
உங்களுடனான கருத்துப் பரிமாற்றம் ஆரோக்கியமானதாக அமைந்துள்ளது.
நன்றி !
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment