பல சமயங்களில், பல இடங்களில், பல மேடைகளில் இந்து சமயம் மூடத்தனமான சமயம், அதன் நெறி முறைகள் அறிவியலுக்கு எதிரானது என்று பலர் தப்பட்டம் அடித்துக் கொண்டு திரிபவர்களை நாம் பார்த்து இருக்கிறோம்.
உலகில் உள்ள சமயங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. ஹிந்தூயிசம்
2. ஜுடாயிசம்.
ஹிந்தூயிசம் - இதிலிருந்து தோன்றியவைகள் தான் பௌத்தம், ஜைனம்,சீக்கியம் மற்றும் சில சமயங்கள்.
ஜுடாயிசம் - இதிலிருந்து தோன்றியவகள் தான் இஸ்லாமும், கிறித்துவமும்.
இந்து சமயம் அறிவியலுக்கு எதிரானது என்பது முற்றிலும் பொய்யான கூற்று.
உதாரணமாக கிறித்துவத்துக்கு வருவோம்.
இயேசு ஒரு கன்னித் தாய்க்கு பிறந்தவர் என்று கூறுகிறது பைபிள். (இதனை அறிவியல் ஏற்றுக் கொள்ளுகிறதா?)
அதுமட்டுமல்ல, விஞ்ஞானி கலிலியோவை, போப் மிரட்டிய சம்பங்களும் உண்டு. இதோ சொல்றங்க.
கிறித்துவத்தின் படி (பழைய ஏற்பாட்டின் படி) சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று கூறியது பபிள். ஆனால், கலிலியோவோ, சூரியன் பூமியைச் சுற்ற வில்லை, பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்று கூறினார். இது வேதத்திற்கு எதிரானதாக இருப்பதாக கூறி, போப் அவருக்கு அழைப்பு விடுத்தார். நீங்கள் இதை வேதம் சொல்வது மாற்றி எழுத வேண்டும் என்றார். அதற்கு, வெகு இயல்பாக நகைச்சுவையோடு, "சூரியனோ பூமியோ உங்களிடம் வந்து சண்டையிடப் போவது இல்லை, அதனால் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். என் கண்டுபிடிப்பை மாற்றி எழுத முடியாதுன்னு " சொல்லிட்டார்.
இப்படி பல வரலாற்று விஷயங்கள், சமயத்தையும் அறிவியலையும் எதிரிகளாக மாற்றிய சம்பவங்கள் உண்டு.
இது போல அறிவியலால், இந்து சமய நெறிகளை இன்று வரை மறுக்க முடியவில்லை. இந்த ராமர் பாலம் மேட்டர் கூட அப்படித் தான். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மாதிரியான கற்களால் கட்டபட்ட பாலம், கடலில் மூழ்கி இருந்து, வேதியியல் மாற்றம் ஏற்பட்டு இன்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என இதனுடைய ஆராய்ச்சியே இன்னும் முடிவுக்கு வரல. அது மட்டும் அல்ல, இப்படி பட்ட விஷயங்களுக்கு நாங்கள் கருத்து சொல்ல மாட்டோம் என்று நாசா அமைப்பு கூட தெரிவித்துள்ளது .
இந்து சமயத்தில் அறிவியலுக்கு எட்டாத விஷயங்கள் இருக்கலாம். உதாரணமாக ஆன்மீகம். அறிவியல் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசும், கிண்டல் செய்யும், ஆன்மீகத்திடம் அதன் பப்பு வேகாது. பிறப்பிற்கு முன் நீ யார், இறப்பிற்கு பின் நீ யார்? இது தான் முக்கியமான கேள்வி. இவை அறிவியலுக்கு தெரியாது என்பதால் இவைகள் மூட நம்பிக்கைகள் ஆகாது. அதாவது நிரூபிக்கப்பட முடியாத விஷயங்கள் எல்லாம் மூட நம்பிக்கைகள் அல்ல. மற்றொருவனுக்கு தீங்கு விளைவிக்காத, யாரையும் பாதிக்காத நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள் ஆகாது.
கொஞ்சம் யோசிச்சு பாருங்க. மற்ற சமயங்களைப் போல ஒரு நாளைக்கு இத்தனை முறை தொழ வேண்டும், வாரத்திற்கு ஒரு முறை ஆலயத்துக்கு செல்ல வேண்டும், கண்டிப்பாக வேத நூல்களை படிக்க வேண்டும், இப்படி எந்த வித கட்டுப்பாடுகளும் இந்து சமயத்தில் கிடையாது. அது மட்டும் அல்ல, கால மாற்றங்களுக்கு ஏற்றபடி வேத நூல்களுக்கு வெர்ஷன் போட்டு மாற்றுவதும் கிடையாது. இப்படி எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ஒரு சமயம் தழைத்து ஓங்கி இருக்கிறது என்றால், அது நிச்சயம், பல நூறு கோடி மக்களின்வாழ்க்கையை, செம்மையாகவும் சிறப்பாகவும் வாழ வழி செய்திருக்கிறது என்பது தான் விளங்கும்.
எந்த சமயத்தையும் மறுக்கவோ, புன்படுத்தவோ இதை எழுதல. எத்தனையையோ ப்ரேயர் மீட்டங்க்ல இந்து கடவுள்களை எப்படி எல்லாம் கேவலப் படுத்துறாங்க, எப்படி பழிக்கிறார்கள்னு நமக்கு தெரியும். அப்படி எல்லாம் நாங்க இல்லீங்க, எங்களுடைய நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்க வேணாம், அவமானப் படுத்தாம இருங்க. எல்லா சமயங்களிலும் ஓட்டைகள் இருக்குன்னு சொல்றதுக்காக தான் இந்த பதிவு.
உடனே நான் ஆர்.எஸ்.எஸ். , பிஜெபி, வி எச் பி நு சொல்ல போறீங்க அதானே ! இது மாதிரி எந்த அமைப்புலயும் இல்லீங்க!
Tuesday, June 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
its your own openion but why did you scrample in christianity
Hey listen dont say illegal which line did say sun round in earth like bible
"Western Christian biblical references Psalm 93:1, Psalm 96:10, and 1 Chronicles 16:30 include (depending on translation) text stating that "the world is firmly established, it cannot be moved." In the same tradition, Psalm 104:5 says, "the LORD set the earth on its foundations; it can never be moved." Further, Ecclesiastes 1:5 states that "And the sun rises and sets and returns to its place" etc.[88]"
Reference - Wikipedia
மன்னிக்கவும், நான் யாருக்கும் மறுமொழி அளிப்பதில்லை ! இருப்பினும் உங்கள் கேள்விக்கு மட்டும் என் விளக்கங்கள்!
Dear Brother,
You can write and praise Hinduism whatever you like. But you should not critisize other religion Chiristianity or Islam. You cannot argue that there is no scientific error in Hindu Scriptures, because there are plenty of errors in Hindu Scriptures against the establised aciences.
For example : -
1) Our earth is on the horn of a cow, when the cow shake its head, that is the reason earth quakes happeneing.
2) Sun, star and other planets are gods and they have children etc.
Please do not critisize others when you have lot with you to be critisized.
அருமையா எழுதுறீங்க!
நல்லாயிருக்கு..
ரசித்தேன்.. தொடர்கிறேன்!!
//1) Our earth is on the horn of a cow, when the cow shake its head, that is the reason earth quakes happeneing.
2) Sun, star and other planets are gods and they have children etc.
//
It is wrong admin.. do you have any proof that where it has been mentioned? If some grannys tell stories you should not put it as points against this post..
See the Poi mugam gave reply to "Everything bla bla..."
Poi mugam keep writing..
எல்லா இஸ்ம் களும் ஒழிந்து மனித நேயம் ஹுயுமனிஸ்ம் தழைக்கும் நாள்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நாள்.மதம் என்றாலே ஏமாற்ற என்றாகி விட்ட போது யார் அதிகம் ஏமாற்றுகிறார்கள் என்பதில் தான் போட்டி.
இந்து மதப் புராணங்களில் உள்ள ஆபாசங்கள்,கடவுள்களின் லீலைகள்,கடவுள்கள் உண்டான கதைகள்,பத்து அவதாரங்கள் எதற்காகக் கொடுக்கப் பட்ட தண்டனைகள்.. எத்தனை முனிவர்கள் கொடுத்த சாபங்கள்,அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளுக்கு சமஸ்கிருதம் மட்டுந்தான் தெரியும் அதுவும் எங்க மாமா ஓதினாத்தான் புரியும் என்று காதுகுத்திப் பெரிய படித்த,பட்டம் வாங்கிய அறிவாளிகளையெல்லாம் மடக்கி வைத்துள்ள அநியாயம் உலகில் வேறெங்குமே கிடையாது.
முகமூடியைக் கழட்டி விட்டுக்,கொஞ்சம் கண்களையுந் திறந்து பாருங்கள்.
Post a Comment