நாடே இந்திய சுதந்திரத்துக்கு போராட்டம் நடத்திய போது , அதில் கலந்துகொள்ளாமல், ஜாதியை வைத்து உள்ளூர் அரசியல் நடத்தியது யார் ?
அ) தந்தைப் பெரியார்
ஆ)ராஜாஜி
இ) காந்தியடிகள்
பயங்கரமான இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறை கண்டு, போராளி போல காட்டிக் கொண்டு, தன் சொந்தக்காரருக்கு இந்தி தெரியும் என்பதால் தான் மத்திய மந்திரி பதவி தந்தேன் என்று சொன்ன பகுத்தறிவு சிங்கம் யார்?
அ) கருணாநிதி
ஆ) தந்தை பெரியார்
இ)கி.வீரமணி
எந்த நாட்டின் சுதந்திர நாளை துக்க தினமாக அனுசரித்தவர் தந்தை பெரியார்?
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) ரஷ்யா
கீழ்கண்டவற்றில் திராவிடன் அல்லாதவனை தூக்கி எறி
அ) ஜோஸ்ப் கிறிஸ்டோபர்
ஆ) ஹஃபீஸ் சயீத்
இ) சிவகுமார்.
பகுத்து ஆராய்வது பகுத்தறிவு என்பது போய், பார்ப்பன எதிர்ப்பு தான் பகுத்தறிவு என்ற மிகப் பெரிய பகுத்தறிவு தத்துவத்தை பின்பற்றும் இயக்கம் எது?
அ) திராவிட கழகம்
ஆ)பாரதிய ஜனதா கட்சி
இ)தேசிய முற்போக்கு திராவிட கழகம்
இதற்கு பதில் அனைவருக்கும் தெரிந்ததே...கொஞ்சம் யோசிச்சு பாருங்க பகுத்தறிவு இயக்கங்களின் அறியாமையைப் பற்றியும் நமக்கு தெரிந்துவிடும்.
எப்படி மூட நம்பிக்கையை திராவிட இயக்கங்கள் சமூகத்தில் இருந்து நீக்க வேண்டி பாடுபடுகிறார்களோ அதே போல பகுத்தறிவு அறியாமையை நீக்க வேண்டிய கட்டாயமும் திராவிடர்களாகிய நமக்கு உண்டு (எடுத்துக் காட்டு உவமை அணி)
பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் ,தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்,திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர்
திருமந்திரம் பாடிய திருமூலர் இவர்களின் அழகு தமிழை புரிந்த கொள்ளவே முடியாத பகுத்தறிவு இயக்கங்கள், திராவிடனுக்கு புது அர்த்தங்கள் கண்டுபிடிக்கின்றன. இதோ சேக்கிழார், அப்பர், கம்பர், ஔவையார் இவங்க எல்லாம் திராவிடன் இல்லையா ?
இதே தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை, சுயமரியாதை என பார்ப்பனரான பாரதியாரும் தான் போராடினார். பாரதியார் திராவிட்னா இல்லையா?
சரி, உங்க பாஷையில கன்னடம், தெலுங்கு,மலையாளம் பேசுறவங்க திராவிடனா இல்லையா?
வட இந்தியாவுல இருக்கவங்க எல்லாருமே ஆர்யர்கள் என்றால், அங்கு வாழும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் எல்லாம் யார்? மாயாவதி யாருக்காக கட்சி நடத்துறாங்க?
திராவிடனும் ஆர்யனும் தான் எதிரி, சண்டை என்றால், மராட்டியருக்கும் பீகாரிக்கும் எதுக்கும் சண்டை? இருவரும் ஆர்யர்கள் தானே?
திராவிடனுக்கு, உங்க பெரியார் ட்ரஸ்ட் கல்லூரிகளில் டொனேஷன் வாங்கறதில்லையா?
ஜாதி வேற்றுமை பார்க்கக் கூடாது, சமூக நீதி காப்பாற்றுவது, சுயமரியாதை இவை எல்லா மககளுக்கும் உண்டு. இதில் வேறுபாடு இல்லை.
ஆனால், இந்து சமயத்தை இழிவாக பேசி, விதண்டாவாத்ம் பேசி பெருமை தேட முயற்சிக்க வேண்டாம்.
அப்படியாப்பட்ட பெரியாரே, சைவ சித்தாந்த துறவியான மறைமலை அடிகளாரை தன் இடத்திற்கு வரவழைத்து விருந்தளித்தார். அந்த சமயத்தில், யாரும் அவர் புன்படும் படி பேச கூடாது, இவ்விடத்தில் புலால் சமைக்க கூடாது என்று கன்னியத்தோடு, பிறர் நம்பிக்கைகள் புன்படாதவாறு, நடந்து கொண்டவர் பெரியார்.
"ஞாயிற்றைக் கை மறைப்பார் இல்"- அறிவை சுட்டிக்காட்டி வள்ளுவன் சொல்லியதை, இந்து சமயத்தை ஒப்பிடுகிறோம் இங்கே!
உங்களைப் போல் 10000 இயக்கங்கள் வந்தாலும் இந்து சமயத்தின் நம்பிக்கைகளையும், கலாச்சாரங்களையும் பழக்கவழக்கங்களையும் அழிக்க முடியாது.
பகுத்தறிவு ஞானிகள் என்று சொல்லி கொள்பவர்கள் இவற்றை எல்லாம் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள்.
ஈரோடு வெங்கட ராமசாமி நாயக்கர் மட்டும் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்தால், "அடடா...நம்ம வளத்த சொத்தை இப்படி அழிக்கிறாங்களே....சாமி இல்லைன்னு சொல்றதுக்கு சம்பளம் கொடுத்து ஆள் வச்சி இருக்காங்களே... " வருத்தப் பட்டிருப்பார்.
ஊர்ல பருவ மழை வரலை, விவசாயிகளோட நலனை பாதுகாத்திடுங்கள். எத்தனையோ பேர் பசியும் பட்டினியுமா இருக்காங்க...அவங்களுக்கு ஏதாச்சும் செய்யுங்க...ஈழத்து அவலங்களுக்கு எதாவது வழி சொல்லுங்க...பகுத்தறிவு சிங்கங்கள் தானே ஆட்சில இருக்கு.....எதாச்சும் செய்யலாமே...ஆட்சியும் அதிகாரமும் கையில் இருக்கும்போது, போராட்ட வேஷங்கள் எதற்கு?
பைசா வந்தா திராவிட இயக்கங்கள் பகுத்தறிவு பஞ்சா பறந்து போகுமோ?
9 comments:
Very Good Post.. Al the best.. keep writing more...
முகம் மட்டும் பொய்யல்ல, சொல்லும் செய்திகளும் பொய் சேர்ந்தவை.பெரியார் இருந்தால் முதல் கேள்வி "இவ்வளவு படித்து,பட்டம் வாங்கி இன்னும் மூளையிலே விலங்கை மாட்டிக் கொண்டு அலைகிறீர்களே,வெட்கமாயில்லையா?" என்பது தான்.
காஞ்சி சுப்பிரமணியக் கண்டித்து விட்டுப் பின் மற்றவர்களை ஏமாற்ற முயலவும்.
இந்து என்று பெருமையடித்துக் கொள்ளும் முன் மனிதனை மனிதனாக நடத்தக் கற்றுக் கொள்ளவும்.
முகமூடி போட்டுக் கொண்டாலும்,பெரியாரைத் தாக்குவது போலப் பார்ப்பனீயத்திற்கு ஒத்தூதுவது
பொய் முகமல்ல.விஷமம் என்பது நன்னா தெரியுதோன்னா!
ஹையோ ஹையோ
எத்தனை பெரியார் வந்தாலும் சில ஜென்மங்கள் திருந்தாது
இந்து சந்து பொந்து
எப்ப திருந்தும் இந்த மனித இனம்
"பிரியமுடன் பிரபு said...
.."
பெரியாரின் விழிப்புணர்வு தங்களுக்கு கிடைத்தற்கு என் வாழ்த்துக்கள் !
எங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விவேகானந்தர், ரமணர், காந்தியடிகளின் கருத்துக்கள் இருக்கிறது!
அப்படியாப்பட்ட பெரியாரே, சைவ சித்தாந்த துறவியான மறைமலை அடிகளாரை தன் இடத்திற்கு வரவழைத்து விருந்தளித்தார். அந்த சமயத்தில், யாரும் அவர் புன்படும் படி பேச கூடாது, இவ்விடத்தில் புலால் சமைக்க கூடாது என்று கன்னியத்தோடு, பிறர் நம்பிக்கைகள் புன்படாதவாறு, நடந்து கொண்டவர் பெரியார்.
"ஞாயிற்றைக் கை மறைப்பார் இல்"- அறிவை சுட்டிக்காட்டி வள்ளுவன்
--
இவர் தான் பெரியார். ஒழுக்கம் இல்லா விட்டால் எல்லாமே பாழ். பக்தி இல்லாவிட்டால் ஒன்றும் நட்டமில்லை. மற்றபடி பணத்துக்கு ஆத்திகம் நாத்திகம் இரண்டுமே ஒன்றுதான். ஒழுக்கம் தான் முக்கியம்.
--
Mohanasundaram said...
அப்படியாப்பட்ட பெரியாரே, சைவ சித்தாந்த துறவியான மறைமலை அடிகளாரை தன் இடத்திற்கு வரவழைத்து விருந்தளித்தார். அந்த சமயத்தில், யாரும் அவர் புன்படும் படி பேச கூடாது, இவ்விடத்தில் புலால் சமைக்க கூடாது என்று கன்னியத்தோடு, பிறர் நம்பிக்கைகள் புன்படாதவாறு, நடந்து கொண்டவர் பெரியார்.
"ஞாயிற்றைக் கை மறைப்பார் இல்"- அறிவை சுட்டிக்காட்டி வள்ளுவன்
--
இவர் தான் பெரியார். ஒழுக்கம் இல்லா விட்டால் எல்லாமே பாழ். பக்தி இல்லாவிட்டால் ஒன்றும் நட்டமில்லை. மற்றபடி பணத்துக்கு ஆத்திகம் நாத்திகம் இரண்டுமே ஒன்றுதான். ஒழுக்கம் தான் முக்கியம்.
நன்றிங்க மோகனசுந்தரம்!
பெரியாரிஸ்ட் என்று சொல்லி அவரை பெரிய ஆள் ஆக்க வேண்டாம். ராமசாமி நாயக்கர் என்றே அழைக்கலாம்
Exactly.
Post a Comment