Tuesday, June 16, 2009

திறமையை மிதிக்கும் சிறுபாண்மையினர் இட ஒதுக்கீடு !


நல்ல மதிப்பெண் பெற்றும், தான் விரும்பிய கல்லூரியில், படிப்பில் சேர முடியாத மகன் கேட்கும் கேள்விகளுக்கு அப்பா பதில் சொல்வது போல அமைந்து இருப்பது தான் இந்த பதிவு.

மகன் : அப்பா, என்னை விட கம்மி மார்க் எடுத்தவங்களுக்கு எல்லாம் நல்ல காலேஜ்ல சீட் கிடைச்சு இருக்கு, எனக்கு மட்டும் ஏன் பா இப்படி?
அப்பா : அதெப்படி கண்ணா, கட்-ஆப் வரிசையில் தானே சீட் கொடுக்கிறாங்க?


மகன் : நம்ம பக்கத்து வீட்டு ஜேம்சும், எதிர் வீட்டு முகம்மதும் என்னை விட மார்க் ரொம்ப கம்மி பா, ஆனா அவங்களுக்கு எல்லாம் சீட் கிடைச்சு இருக்கு பா, நான் இவ்வளவு மார்க் எடுத்தும் எனக்கு கிடைக்கலியே பா?
அப்பா: கண்ணா, அவங்களுக்கு எல்லாம் தனியா 3% இட ஓதுக்கீடு இருக்குப்பா..


மகன் : ஏன், அப்படி?
அப்பா : சிறுபாண்மையினர்க்கு 3% இட ஒதுக்கீடு அரசு அறிவிச்சு இருக்காங்கப்பா..


மகன் : நம்ம எல்லோரும் ஒரே தெருவுல இருக்கும், நாங்க மூனு பேரும் ஒர வகுப்புல தான் படிச்சோம், இன்னும் சொல்ல போனா, நம்ம எல்லோருக்கும் ஒரே மாதிரி வசதி வாய்ப்பு தான்....ஆனா அவங்களுக்கு மட்டும் ஏன் பா?
அப்பா :அது அப்படி தான் பா...எல்லா சமயத்தவருக்கும் சரி சமமான வாய்ப்பு கொடுக்கணும்ங்கறது அரசோட திட்டம் கண்ணா..


மகன் : ஆனா, அந்த 3% இட ஒதுக்கீடு, என்னுடைய தட்டில் இருந்த, ஒரே இட்லியை இன்னொருத்தருக்கு புடுங்கி கொடுக்குற மாதிரி தானப்பா? என்ன மாதிரி எத்தனையோ மாணவர்கள், மார்க் இருந்தும் சேர முடியாம போகுதே...அது சரி தானா பா?
அப்பா : நம்முடைய நாடு செக்யூலர் நாடு பா...மதச் சார்பில்லா நாடு....எல்லரையும் அனுசரிச்சு போகணும் கண்ணா?


மகன் : இந்துக்களின் உரிமையை பறிக்குறது தான்..செக்யூலரிஸ்மா?
அப்பா : எந்த ஒரு சமயத்தவரையும் புன்படுத்தாம, எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துறது தான் செக்யூலரிசம் கண்ணா.அதான், பிஜெபியை எல்லோரும் மதவாதக் கட்சின்னு சொல்றாங்கள்.


மகன் : அதென்ன பா, மதவாதக் கட்சி?
அப்பா: ஒருதலைப் பட்சமா, இந்து சமுதாயத்துக்காக பேசுறாங்க அவங்க...அதான் மதவாதக் கட்சி...


மகன் : கலைஞ்சர் மட்டும், "இந்து என்றால் திருடன்", "ராமன் ஒரு குடிகாரன்","கார்த்திகை நோன்பு மூடத்தனமானது,ரம்ஜான் நோன்பு உடம்பிற்கு நல்லதுன்னு" நம்முடைய சமுதாயத்தை கேவலப்படுத்தி பேசுறாரே அவரும் மதவாதியா அப்பா?
அப்பா : இல்லை பா, நம்ம தமிழினத் தலைவர் மதவாதி இல்லை, திராவிடன் ..

மகன் : திராவிடன்னா...யாரு பா?
அப்பா : டேய் போய், வேலையை பாரு டா....திராவிட கட்சிக்காரனுக்கே தெரியாத கேள்வி எல்லாம் என்னை கேட்டுட்டு இருக்கே ! போ...போய் ஒழுங்கா படிக்குற வேலையை பாரு. அடுத்தது அரசு, தனியார் பணிகளிலும் இட ஒதுக்கீடு எடுத்துட்டு வர்றாங்களாம், நீ வேற இந்து, நல்லா படி, அப்ப தான் நமக்கு இந்த செக்யூலர் நாட்டுல சோறு!

எப்ப தான் இந்துக்களை மூன்றாம் தர குடிமக்களாக பார்க்கும் வழக்கத்தை நிறுத்தப் போறாங்களோ தெரியல!


4 comments:

Unknown said...

there you are.

ஆல் இன் ஆல் அழகு ராஜா said...

நல்ல நமைச்ச்ல்.....

3% தான் உமக்கு அரிக்குது போல...

ராமய்யா... said...

/திராவிட கட்சிக்காரனுக்கே தெரியாத கேள்வி எல்லாம் என்னை கேட்டுட்டு இருக்கே //

comedy... rasithen

Thamizhan said...

ஏண்டா! அம்பி! நோக்கு எத்தனைத் தரம் சொல்லிட்டேன்!எல்லாம் அவன் செயல் தாண்டா!
ஏன் தோப்பனார் காலத்துலே எல்லா உத்யோகத்திலேயும் நம்மவாத்தான் இருந்தா.அவால்லாம் நமக்கு ஒத்துவராத விவசாயம்
துணி தொவைக்கிரது,மாடு கன்னு இப்படியிருந்தா!
நாம வெறும் 3% தான்.ஆனால் 80-90% எல்லா நல்ல உத்தியோகமும் நம்மவாத்தான்.
சமஸ்கிருதந் தெரிச்சாத்தான் மெடிகல் காலேஜ்லேயே சேரலாம் அப்படின்னா யாரு டாக்டரா வருவா,நீ தான் சம்த்தாச்சே!புரிஞ்சிப்பே!
இதெல்லாம் வெள்ளைக் காரனுக்கே பொறுக்கல்லே!மத்தவாளும் படிக்கணும்,வேலை கொடுக்கணும்னு ஆரம்பிச்சுட்டா.
பாவம் அந்தப் பாய் குடும்பத்திலேயே இப்பத்தான் அவன் முதல்ல நன்னா காலேஜ் படிப்பே சேர்ந்திருக்கான்.
ஆண்டவனை எவ்வளவு நாள் நம்ம ஏமாத்தினோம்,இப்ப நம்மவா கொஞ்சம் அனுபவிக்க வேண்டியது தான்.பாவம் ஒன்னும் செய்யாத நீ எங்க வயித்திலே பொறந்தியோன்னா,உயர் ஜாதியோன்னா,கொஞசம் அவஸ்தத்ப் பட வச்சுட்டான்,பொறுத்துக்கோ.
எப்படியிருந்தாலும் நோக்கு சென் ட்ரல்லே,பேங்குலே ஏதானும் அத்திம் பேர்ட்ட சொல்லி வாங்கிடலாம்.,

Post a Comment