பெரியார், தம் 70 ஆவது வயதில், 30 வயதுடைய நாகம்மையை திருமணம் செய்து கொண்டார். இதனை கடுமையாக எதிர்த்த அண்ணா துரை, இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக கூறி திராவிடக் கழகத்திலிருந்து வெளியறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். பிறகு, சிறிது காலம் கழித்து, கருணாநிதியும் வந்து சேர்ந்து கொண்டார் என்பது வரலாறு.
இங்க தான் நமக்கு சந்தேகம். இரண்டாவது திருமணம் என்பது அந்த காலத்தில் ரொம்ப சாதாரணமான விஷயம். நம்முடைய முப்பாட்டனுக்கு ரெண்டு மனைவிகள் இருந்த கதை எல்லாம் நமக்கு தெரியும். இந்த விஷயத்துக்காகவா, அண்ணா வெளியேறினார்? நம்பற மாதிரி இல்லையே....அதனால கொஞ்சம் தேடினேன், வரலாற்றை புரட்டிப் பார்த்தேன். எல்லா வரலாறுகளுக்கும் இரண்டு மூன்று வெர்ஷன்ஸ் இருப்பது இயல்பு. அதே மாதிரி தான் இதுவும்.
இன்னொரு தரப்பு சொல்றதையும் கேட்டு, எது உண்மை, எது பொய், நிஜமா என்னதான் நடந்துச்சுன்னு நம்ம யோசிச்சு முடிவு செஞ்சுக்கனும்.
பெரியார், அந்த காலத்திலேயே செல்வச் சீமான். ஆனால் செல்வந்தர்களுக்கே இருக்கும் கஞ்சத்தனம் அவருக்கு ரொம்ப அதிகம். சுருக்கமா சொல்லனும்னா எச்சைக் கையில் காக்காய் கூட ஓட்ட மாட்டார். இது பெரியார் அபிமானிகளுக்கு அவர் கூட இருந்தவங்களுக்கு நல்லா தெரியும்.
வயசு ஆக ஆக, பெரியாருக்கு ஒரு பயம் வந்துச்சு. அதாவது, வாரிசு இல்லாத சொத்தை நம்ம திராவிட கண்மணிகள் ஆட்டையை போட்டுறுவாங்களோன்னு பயந்தார் பெரியார். சரி, நம்மை நன்றாக கவனித்துக் கொள்ளும், மணியம்மையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்தார் பெரியார். இது குறித்து ஆலோசிக்க, அவருடைய நண்பர் ராஜ கோபாலாச்சாரியை(ராஜாஜி-பார்ப்பனன்), திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் சந்தித்து பேசினார். வாழ்நாள் முழுக்க பார்ப்பன எதிர்ப்பாளியான பெரியார், தமக்கு ஆலோசனை வழங்க எந்த திராவிட நண்பனிடமும் போகவில்லை, மாறாக பார்ப்பனனிடம் சென்றார்.
பெரியாரின் குழப்பத்தைக் கேட்ட ராஜாஜி என்ன சொன்னார்னா....."மணியம்மையை தத்து எடுத்துக் கொண்டால், அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டால், உங்கள் சொத்துக்கள் கை மாறி விடும். ஆகையால், திருமணம் செய்து கொள்ளுங்கள், உங்கள் சொத்தை அபகரிக்க முடியாது" என்று சொன்னாராம் ராஜாஜி. இது பெரியார்க்கு சரியான யோசனையாக தோன்றியது. அதன்படி ஜூலை 9,1948 இல் திநகரில் ஒரு பிராமணரின் வீட்டில் நடந்தது பெரியாரின் திருமணம். ஒரு திராவிட கண்மணிகளுக்கு கூட அழைப்பு இல்லையாம்! இப்படி செஞ்சு, பீரோ சாவியை மணியம்மையிடம் ஒப்படைத்தாராம் பெரியார். இந்த ட்ரஸ்டை தான் இப்ப கீரமணி பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார். (கொள்கைகளை அல்ல).
இதுல கடுப்பு ஆகி தான் அண்ணா திராவிட கழகத்தை விட்டு வெளியறி, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தாராம். அதன் பிறகு ஓடி வந்து ஒட்டிக் கொண்டவர் தான் கருணாநிதியாம்.
இதுல எது நம்பற மாதிரி இருக்குன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!
அண்ணா கைல இருந்து என்னவெல்லாம் ப்ளான் பண்ணி கட்சி அதிகாரத்தை கருணாநிதி பெற்றார் என்பது இதை விட பெரிய கதை. அது இன்னொரு பதிப்புல பார்ப்போம் !
அண்ணா கைல இருந்து என்னவெல்லாம் ப்ளான் பண்ணி கட்சி அதிகாரத்தை கருணாநிதி பெற்றார் என்பது இதை விட பெரிய கதை. அது இன்னொரு பதிப்புல பார்ப்போம் !
2 comments:
இந்தப் பொய் முகத்தின் உண்மைப் பெயர் விரைவில் வெளிவரத்தான் போகிறது.
பெரியார் உடல் நலமில்லாமல் இருந்த போது பார்க்க வந்தவர்கள்"உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்வதைக் கேட்டு எரிச்சல் அடைந்த பெரியார் "சும்மா சொல்கிறீர்களே தவிர யார் என்னைப் பார்த்துக் கொள்கிறீர்கள்" என்று கேட்டார்.
அப்போதுதான் அந்தக் காலத்திலே கல்லூரி படித்திருந்த கொள்கைக் குடும்பத்துப் பெண்
தானாக வந்து அவரைப் பார்த்துக் கொள்ள வந்தார்.
பெரியார் எப்போதும் போலப் பச்சையாகவே சொன்னார்.இது அவரது கொள்கை,கழகம்,சொத்து இவற்றைப் பார்த்துக்கொள்ள ஒரு சட்ட பூர்வமான ஏற்பாடு.உடலுறவுக்காக அல்ல.உடலுறவுக்கு என்றால் அதற்குத் திருமணமே வேண்டிய அவசியமில்லை என்றே சொன்னார்.
ஆச்சாரியாரைச் சந்தித்த போது ஆச்சாரியார் இதற்கு எதிராகச் சொல்லியதுடன் சாட்சிக் கையெழுத்திட் அழைத்ததையும் வர மறுத்து விட்டார்.
பதிவுத் திருமணம் செய்தது எப்படிப் பார்ப்பனரின் வீடானது பொய்யரே!
பெரியாரின் டிரஸ்ட் யாரும் கைவைக்க முடியாத டிரஸ்ட்.அந்த ஒரு டிரஸ்ட் தான் எந்த பணமுதலைகள்,திருட்டுப் பணம்,சுவிஸ் வங்கிகள் உதவியில்லாமல் தொண்டர்களின் நன்கொடைகள்
விடுதலையில் பட்டியல் போட்டு வெளியிடப் பட்டு
பன் மடங்கு வளர்ந்திருக்கிறது.
எவ்வளவு வங்கிக் கடன்கள் ஒவ்வொரு திட்டத்திற்கும்,கட்டிடத்திற்கும் வாங்கப் பட்டது,எப்படி ஒழுங்காகத் திருப்பித் தரப்பட்டது என்பது பொதுச் செய்தி.
பொய்முகமே,கொஞசம் உண்மை சொல்ல முயலுங்கள்.
பெரியார் மீதும்,இயக்கத்தின் மீதும் எவ்வளவோ பேர் வீசிப் பார்த்து விட்டார்கள்.அவர்கள் கைகளில்தான் சாணமே தவிரப் பெரியார் மீதோ,இயக்கத்தின் மீதோப் பட வில்லை.அது திறந்த புத்தகம்.
முதலமைச்சர்களே முயன்று பார்த்து விட்டார்கள்.
பொய் முகத்தின் பொய்கள் ஒட்டாது.போய்
கையையும்,முக்கியமாக வாயையும் கழுவிக்கொள்ளவும்.

Post a Comment