Thursday, July 9, 2009

இஸ்லாமிய சமய குருவும், நானும் !

எப்படா இஸ்லாமியப் பண்டிகைகள் வரும், எப்ப நம்ம சகோதரர்கள் வீட்டுக்கு போய் பிரியாணி சாப்பிட போறோம்னு இருக்கும். அவ்வளவு அருமையா இருக்கும். பிரியாணி மட்டுமல்ல, அவர்களின் நல்ல கவனிப்பு, அதை சாப்பிடு இதை சாப்பிடுன்னு ரொம்ப தட புடலான கவனிப்புகள் இருக்கும். ஒரே கூட்டமா கலக்லப்பா இருக்கும். பொதுவாக சமய பேதம் இல்லாம வெள்ளை மனசோட,நம்ம கிட்ட மனச விட்டு பேசுவாங்க.

ஆனால் ஒரு சமயம் அப்படி விருந்துக்கு போகும் போது நமக்கு கொஞ்சம் வேறு விதமான அனுபவம் ஏற்பட்டது. அப்பொழுது நான் 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். என் தந்தைக்குக்கு நெருக்கமானவர் அந்த இஸ்லாமிய சகோதரர், எங்களை கண்டிப்பாக வீட்டுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். எந்த பண்டிகை என்று ஞாபகம் இல்லை.

நாங்களும் சென்றோம். வழக்கம் போல நல்ல கவனிப்பு. சகோதரரின் தந்தையார் ஒரு இஸ்லாமிய சமய குரு.வீட்டின் ஒரு புறத்தில் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம்,சகோதரரின் தந்தையார் இஸ்லாத்தை பற்றியும், நபிகளைப் பற்றியும் அங்கு வந்திருந்தவர்களுக்கு சொல்லி கொண்டிருந்தார். நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து, "என்னப்பா, இன்னும் சாப்பிடலையா...போய் சாப்பிட்டு வா....இந்த முறை பீப் பிரியாணி செஞ்சி இருக்கோம் போய் சாப்பிடு பா" என்று அன்பாக சொன்னார்.


உடனே நான் "அங்கிள், நான் பீப் சாப்பிட மாட்டேன்...வெள்ளை சாதம் சாப்பிட்டுக்குறேன்னு" சொன்னேன். அதற்கு அவர் ஒரு பெரிய விளக்கமே கொடுத்தார்.

" அதென்ன பா, பீப் சாப்பிட மாட்டேன்னு சொல்ற. உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்தும், இறைவன் மனிதனுக்காக படைத்தது தான். அதுமட்டுமல்ல நம்முடைய பற்களும் அதற்கேற்ற மாதிரி தான் கொடுத்து இருக்கிறார். ஆடு மாடுகளுக்கு INCISOR பற்கள் தான் இருக்கும் CANINE பற்கள் இருக்காது. ஆகையால், அவைகள் இலை, தழைகளை உணவாக உட்கொள்கிறது. சிங்கம் புலி, போன்றவைகளுக்கு CANINE பற்கள் இருக்கும், (ஆனால் இலை தழைகளை சாப்பிடத் தேவையான இன்னொரு வகைப் பற்கள் கிடையாது- MOLAR பற்கள் என நினைக்கிறேன் ) அவைகள் மாமிசம் போன்ற உணவுகளை கடித்து உண்பதற்கு தான். ஆனால் மனிதனுக்கு அனைத்து வகையான பற்களை இறைவன் கொடுத்ததற்கு காரணம், இவ்விரு வகை உணவுகளையும் சாப்பிடத் தான். அதனால், அதை சாப்பிட மாட்டேன், இதை சாப்பிட மாட்டேன், அமாவாசை, பௌர்ணமி,ஏகாதசில சாப்பிட மாட்டேன், அது இதுன்னு சொல்றது எல்லாம் சும்மா பொய். மூட நம்பிக்கை."
என கொஞ்சம் இந்து சமயத்தைப் பற்றி இழிவாக பேசினார். மற்ற சகோதரர்களும், அவர் சொல்வது சரி என்று சொன்னார்கள். அத்தனை பேர் எதிரில் அவர் அப்படி சொன்னது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

"சரி சரி..போய் சாப்பிடு பா" என்று சொன்னார் அவர்.

"நீங்க சொன்னது எல்லாம் சரிங்க அங்கிள், எல்லா வகையான பற்கள் உங்களுக்கு இருந்தும் பன்றியை நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை? " என்று எதார்த்தமாக கேட்டேன். அவர்களுக்கு பதிலடி கொடுக்க கேட்கவில்லை.
அங்க இருந்த கூட்டமே அமைதி ஆயிடுச்சு. அங்கிள் கண்களில் கோவம் கொப்பளிக்கிறது. பதில் எதுவும் சொல்லவில்லை.

"ஏன் மா, தம்பிக்கு வெள்ளை சாதமும் ரசமும் போடு மா" என்று தன் மனைவிக்கு குரல் விட்டார் அங்கிள்.


அப்படி பேசியதற்கு, இப்பொழுது வருத்தப் படுகிறேன் என்றாலும், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிய வேண்டும். நாம் பேசுவது மற்றவரை எந்த அளவிற்கு பாதிக்கும் என்று யோசித்து பேச வேண்டும். எந்த சமயத்தினரின் உணர்வுகளையும் "Take if for Granted" ஆக எடுத்துக் கொள்ளாமல்,மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது!

Wednesday, July 8, 2009

அரைவேக்காட்டு நாத்திகன் - சின்ன கதை!

ஒருவர் வெகுநாட்களாக நோயால் அவதியுற்று வந்தார். ஒரு நாள், அவரைப் பார்க்க ஆன்மீகவாதி/சமய குரு ஒருவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் வாடி, சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். அனைவரும், இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டனர்.

பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக் கூறினார்.
அந்த கூட்டத்திலும் ஒரு அரைவேக்காட்டு நாத்திகன் ஒருவன் இருந்தான். இதனைக் கேட்டதும் நக்கலாய் ஹி ஹி ஹி என சிரிக்கத் தொடங்கினான். "வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணம்ப்படுத்துமா ? வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா ?" என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்". நம்ம பெரியார் வழி வந்த நாத்திகனுக்கு தான் மூளையே இல்லைன்னாலும், கோவம் பொத்துகுட்டு வருமே..."நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்து விடுவேன், என அடிக்கப் பாய்ந்தான்"

பதற்றமே இல்லாத அந்த சமய குரு, "முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி?. இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் " என்றாராம். மூக்குடைந்த நாத்திகன் வெட்கித் தலை குணிந்தான்.

இந்தக் கதையின் கரு திரு. சுகி சிவம் அவர்களின் நூலான "இந்த நாள் இனிய நாள்" என்பதில் இருக்கிறது. கொஞ்சம் எக்ஸ்ட்ரா சேர்த்து சொல்லி இருக்கேன். அவ்ளோ தான்.

கோட் சூட் போட்டுட்டு, வெள்ளைத் தோளோடு, இசையினால் நோயை குணப்படுத்த முடியும் என்று நிரூபித்து இருக்கிறோம் என பெயர் தெரியாத யூனிவர்சிட்டி ரிசர்ச் செஞ்சி சொன்னாங்கன்னா..... நம்புவாங்க. ஒவ்வொரு சொல்லும், சப்தமும் பல மாற்றங்களை ஏற்படுத்த கூடிய சக்தி வாய்ந்தவை என நம்மவர்கள் சொன்னா சிரிப்பார்கள்.


இந்தியர்கள் எப்பொழுதும், எல்லா விஷயங்களிலும் கருப்பொருளில் ரொம்ப ஸ்ட்ராங்க்..ஆனா மார்க்கெட்டிங்க்ல ரொம்ப வீக். அதன் விளைவுகள் தான் இந்த மாதிரி போலி நாத்திக கும்பல் தோன்றக் காரணம். மக்களின் படிப்பறிவு உயர உயர, இந்த கும்பலின் எண்ணிக்கை குறையத் தொடங்கி இருப்பது ஆரோக்யமான விஷயம் தான்.

இருபது வயசுல நாத்திகம் பேசுபவனும், முப்பது வயசுல கம்யூனிசம் பேசுபவனும், ஐம்பது வயசுல ஈசனைத் தேடுபவனும் தான் திராவிடத் தமிழனா ?


இது ஓரளவுக்கு ஒப்புக் கொள்கிற மாதிரி தெரிஞ்சா...இந்த லிங்க்ல போய் பாருங்க....அதுல திராவிடன் யார்னு சொல்லுங்க..

http://poimugam.blogspot.com/2009/06/blog-post_25.html