Thursday, July 9, 2009

இஸ்லாமிய சமய குருவும், நானும் !

எப்படா இஸ்லாமியப் பண்டிகைகள் வரும், எப்ப நம்ம சகோதரர்கள் வீட்டுக்கு போய் பிரியாணி சாப்பிட போறோம்னு இருக்கும். அவ்வளவு அருமையா இருக்கும். பிரியாணி மட்டுமல்ல, அவர்களின் நல்ல கவனிப்பு, அதை சாப்பிடு இதை சாப்பிடுன்னு ரொம்ப தட புடலான கவனிப்புகள் இருக்கும். ஒரே கூட்டமா கலக்லப்பா இருக்கும். பொதுவாக சமய பேதம் இல்லாம வெள்ளை மனசோட,நம்ம கிட்ட மனச விட்டு பேசுவாங்க.

ஆனால் ஒரு சமயம் அப்படி விருந்துக்கு போகும் போது நமக்கு கொஞ்சம் வேறு விதமான அனுபவம் ஏற்பட்டது. அப்பொழுது நான் 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். என் தந்தைக்குக்கு நெருக்கமானவர் அந்த இஸ்லாமிய சகோதரர், எங்களை கண்டிப்பாக வீட்டுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். எந்த பண்டிகை என்று ஞாபகம் இல்லை.

நாங்களும் சென்றோம். வழக்கம் போல நல்ல கவனிப்பு. சகோதரரின் தந்தையார் ஒரு இஸ்லாமிய சமய குரு.வீட்டின் ஒரு புறத்தில் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம்,சகோதரரின் தந்தையார் இஸ்லாத்தை பற்றியும், நபிகளைப் பற்றியும் அங்கு வந்திருந்தவர்களுக்கு சொல்லி கொண்டிருந்தார். நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து, "என்னப்பா, இன்னும் சாப்பிடலையா...போய் சாப்பிட்டு வா....இந்த முறை பீப் பிரியாணி செஞ்சி இருக்கோம் போய் சாப்பிடு பா" என்று அன்பாக சொன்னார்.


உடனே நான் "அங்கிள், நான் பீப் சாப்பிட மாட்டேன்...வெள்ளை சாதம் சாப்பிட்டுக்குறேன்னு" சொன்னேன். அதற்கு அவர் ஒரு பெரிய விளக்கமே கொடுத்தார்.

" அதென்ன பா, பீப் சாப்பிட மாட்டேன்னு சொல்ற. உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்தும், இறைவன் மனிதனுக்காக படைத்தது தான். அதுமட்டுமல்ல நம்முடைய பற்களும் அதற்கேற்ற மாதிரி தான் கொடுத்து இருக்கிறார். ஆடு மாடுகளுக்கு INCISOR பற்கள் தான் இருக்கும் CANINE பற்கள் இருக்காது. ஆகையால், அவைகள் இலை, தழைகளை உணவாக உட்கொள்கிறது. சிங்கம் புலி, போன்றவைகளுக்கு CANINE பற்கள் இருக்கும், (ஆனால் இலை தழைகளை சாப்பிடத் தேவையான இன்னொரு வகைப் பற்கள் கிடையாது- MOLAR பற்கள் என நினைக்கிறேன் ) அவைகள் மாமிசம் போன்ற உணவுகளை கடித்து உண்பதற்கு தான். ஆனால் மனிதனுக்கு அனைத்து வகையான பற்களை இறைவன் கொடுத்ததற்கு காரணம், இவ்விரு வகை உணவுகளையும் சாப்பிடத் தான். அதனால், அதை சாப்பிட மாட்டேன், இதை சாப்பிட மாட்டேன், அமாவாசை, பௌர்ணமி,ஏகாதசில சாப்பிட மாட்டேன், அது இதுன்னு சொல்றது எல்லாம் சும்மா பொய். மூட நம்பிக்கை."
என கொஞ்சம் இந்து சமயத்தைப் பற்றி இழிவாக பேசினார். மற்ற சகோதரர்களும், அவர் சொல்வது சரி என்று சொன்னார்கள். அத்தனை பேர் எதிரில் அவர் அப்படி சொன்னது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

"சரி சரி..போய் சாப்பிடு பா" என்று சொன்னார் அவர்.

"நீங்க சொன்னது எல்லாம் சரிங்க அங்கிள், எல்லா வகையான பற்கள் உங்களுக்கு இருந்தும் பன்றியை நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை? " என்று எதார்த்தமாக கேட்டேன். அவர்களுக்கு பதிலடி கொடுக்க கேட்கவில்லை.
அங்க இருந்த கூட்டமே அமைதி ஆயிடுச்சு. அங்கிள் கண்களில் கோவம் கொப்பளிக்கிறது. பதில் எதுவும் சொல்லவில்லை.

"ஏன் மா, தம்பிக்கு வெள்ளை சாதமும் ரசமும் போடு மா" என்று தன் மனைவிக்கு குரல் விட்டார் அங்கிள்.


அப்படி பேசியதற்கு, இப்பொழுது வருத்தப் படுகிறேன் என்றாலும், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிய வேண்டும். நாம் பேசுவது மற்றவரை எந்த அளவிற்கு பாதிக்கும் என்று யோசித்து பேச வேண்டும். எந்த சமயத்தினரின் உணர்வுகளையும் "Take if for Granted" ஆக எடுத்துக் கொள்ளாமல்,மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது!

10 comments:

மதி.இண்டியா said...

மிக அருமையான பதிலடி ,

வருத்தப்பட வேண்டியதெல்லாம் இல்லை ,

//அமாவாசை, பௌர்ணமி,ஏகாதசில சாப்பிட மாட்டேன், அது இதுன்னு சொல்றது எல்லாம் சும்மா பொய். மூட நம்பிக்கை."
என கொஞ்சம் இந்து சமயத்தைப் பற்றி இழிவாக பேசினார். //

அப்புறம் ஏன் ரம்ஜானாம் ?

வால்பையன் said...

மனிதனுக்கு மாமிசம் சாப்பிட வசதியான பற்கள் அழிந்து யுகமாகிவிட்டது!

முன்னிருக்கும் கோரை பற்கலோடு அசைவத்திலிருந்து முழுவதுமாக சைவத்திற்கு மாறிய விலங்கு கோலாகரடி, பரிணாம மாற்றத்தில் இன்னும் சில நூற்றாண்டுகளில் அந்த பற்களும் மறையும்.

மாமிசம் மனிதனுக்கு முக்கிய உணவல்ல!
அது இல்லாமலும் வாழலாம்!

பொய் முகம் said...

பின்னூட்டமிட்ட மதி.இந்தியா மற்றும் வால்பையனிற்கும் நன்றி!

மதி.இண்டியா said...

வால்பயலுக்கு இந்த விசய்மெல்லாம் தெரியும்னு இப்பதான் எனக்கு தெரியும் , அருமை.

வால்பையன் said...

முட்டையிடும் பறவைகளோ, விலங்குகளோ பால் கொடுக்காது!

ஆனால் அவ்வாறு பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு ”ப்ளாட்டிபஸ்”

நீர் வால் உயிரனங்களில் குட்டி போட்டு பால் கொடுப்பது திமிங்கலம்!

பறவையினங்களில் குட்டி போட்டு பால் கொடுப்பது வவ்வால்!

மதி.இண்டியா said...

என்னடா இன்னும் வால் முளைக்கலயேன்னு பாத்தேன் ,???????

எம்.எம்.அப்துல்லா said...

//அத்தனை பேர் எதிரில் அவர் அப்படி சொன்னது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
//

அவர் செய்தது பெரும் தவறு. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.

பொய் முகம் said...

பின்னூட்டமிட்டதற்கு நன்றி எம்.எம்.அப்துல்லா !

நிகழ்காலத்தில்... said...

//மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிய வேண்டும். நாம் பேசுவது மற்றவரை எந்த அளவிற்கு பாதிக்கும் என்று யோசித்து பேச வேண்டும்//

அனைவருக்கும் பொதுவான கருத்து

பொய் முகம் said...

"நிகழ்காலத்தில்... said...
//மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிய வேண்டும். நாம் பேசுவது மற்றவரை எந்த அளவிற்கு பாதிக்கும் என்று யோசித்து பேச வேண்டும்//

அனைவருக்கும் பொதுவான கருத்து"

பின்னூட்டமிட்ட நிகழ்காலத்திற்கு நன்றி!

Post a Comment