Wednesday, July 8, 2009

அரைவேக்காட்டு நாத்திகன் - சின்ன கதை!

ஒருவர் வெகுநாட்களாக நோயால் அவதியுற்று வந்தார். ஒரு நாள், அவரைப் பார்க்க ஆன்மீகவாதி/சமய குரு ஒருவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் வாடி, சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். அனைவரும், இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டனர்.

பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக் கூறினார்.
அந்த கூட்டத்திலும் ஒரு அரைவேக்காட்டு நாத்திகன் ஒருவன் இருந்தான். இதனைக் கேட்டதும் நக்கலாய் ஹி ஹி ஹி என சிரிக்கத் தொடங்கினான். "வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணம்ப்படுத்துமா ? வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா ?" என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்". நம்ம பெரியார் வழி வந்த நாத்திகனுக்கு தான் மூளையே இல்லைன்னாலும், கோவம் பொத்துகுட்டு வருமே..."நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்து விடுவேன், என அடிக்கப் பாய்ந்தான்"

பதற்றமே இல்லாத அந்த சமய குரு, "முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி?. இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் " என்றாராம். மூக்குடைந்த நாத்திகன் வெட்கித் தலை குணிந்தான்.

இந்தக் கதையின் கரு திரு. சுகி சிவம் அவர்களின் நூலான "இந்த நாள் இனிய நாள்" என்பதில் இருக்கிறது. கொஞ்சம் எக்ஸ்ட்ரா சேர்த்து சொல்லி இருக்கேன். அவ்ளோ தான்.

கோட் சூட் போட்டுட்டு, வெள்ளைத் தோளோடு, இசையினால் நோயை குணப்படுத்த முடியும் என்று நிரூபித்து இருக்கிறோம் என பெயர் தெரியாத யூனிவர்சிட்டி ரிசர்ச் செஞ்சி சொன்னாங்கன்னா..... நம்புவாங்க. ஒவ்வொரு சொல்லும், சப்தமும் பல மாற்றங்களை ஏற்படுத்த கூடிய சக்தி வாய்ந்தவை என நம்மவர்கள் சொன்னா சிரிப்பார்கள்.


இந்தியர்கள் எப்பொழுதும், எல்லா விஷயங்களிலும் கருப்பொருளில் ரொம்ப ஸ்ட்ராங்க்..ஆனா மார்க்கெட்டிங்க்ல ரொம்ப வீக். அதன் விளைவுகள் தான் இந்த மாதிரி போலி நாத்திக கும்பல் தோன்றக் காரணம். மக்களின் படிப்பறிவு உயர உயர, இந்த கும்பலின் எண்ணிக்கை குறையத் தொடங்கி இருப்பது ஆரோக்யமான விஷயம் தான்.

இருபது வயசுல நாத்திகம் பேசுபவனும், முப்பது வயசுல கம்யூனிசம் பேசுபவனும், ஐம்பது வயசுல ஈசனைத் தேடுபவனும் தான் திராவிடத் தமிழனா ?


இது ஓரளவுக்கு ஒப்புக் கொள்கிற மாதிரி தெரிஞ்சா...இந்த லிங்க்ல போய் பாருங்க....அதுல திராவிடன் யார்னு சொல்லுங்க..

http://poimugam.blogspot.com/2009/06/blog-post_25.html

12 comments:

கலையரசன் said...

//இருபது வயசுல நாத்திகம் பேசுபவனும்,
முப்பது வயசுல கம்யூனிசம் பேசுபவனும்,
ஐம்பது வயசுல ஈசனைத் தேடுபவனும்
தான் திராவிடத் தமிழனா ? //

ஆகா! தமிழனை சிறுகுறிப்பு
வரைஞ்சிட்டிங்களே! மேல உள்ள
கருத்து என்னை மிகவும் கவர்ந்தது!
நிறைய எழுதுங்கள்..

நிகழ்காலத்தில்... said...

//முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி?. இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் "//

அருமையான கருத்து.,

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

கடவுளுக்கும், திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்?

கடவுள் மறுப்பாளர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.

கடவுள் உண்டு என்பதை நிறுபிக்க அல்லது கடவுள் மறுப்பாளர்களை மடக்க உங்கள் கேள்விகளை உங்கள் ப்ளாக்கில் வையுங்கள்!

எனது பதிவில் ஒரு லிங்க் மட்டும் கொடுங்கள்!

பொய் முகம் said...

பின்னூட்டமிட்ட, கலையரசன்,நிகழ்காலம், வால்பையனிற்கும் என் நன்றிகள்!

"கடவுள் உண்டு என்பதை நிறுபிக்க அல்லது கடவுள் மறுப்பாளர்களை மடக்க உங்கள் கேள்விகளை உங்கள் ப்ளாக்கில் வையுங்கள்!"

நிச்சயமாக வைக்கிறோம்! ஆனால், கடவுள் மறுப்பாளர்களை மடக்க அல்ல, சமயத்தின் பொருளை விளக்க !
நாத்திகன் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு சமயத்தை மட்டும் இழிவுபடுத்தி, மற்ற சமயங்களிடம் கைக்கூலி பெரும் போலிகளின் திரைகளை கிழிக்கும் நேரம் வந்து விட்டது.!

வால்பையன் said...

//நாத்திகன் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு சமயத்தை மட்டும் இழிவுபடுத்தி, மற்ற சமயங்களிடம் கைக்கூலி பெரும் போலிகளின் திரைகளை கிழிக்கும் நேரம் வந்து விட்டது.! //

நிச்சயமாக நானும் அதை எதிர்க்கிறேன்!
கடவுள் என்பது ஒரு புனைவு என்று நம்புபவன் நான்! இந்த கடவுள் இல்லை அந்த கடவுள் ஊண்டு என்று சொல்பவர்களுக்கும் உங்களது கேள்விகள் காட்டமாக இருக்கட்டும்!

எந்த கடவுளும் இல்லை என்று எனது பதில் இருக்கும்!

ஆனந்தன் said...

மதிப்பிற்க்குறிய பொய்முகத்திற்க்கு நன்றி,இப்படி ஒரு பதிவு எழுதியதிற்க்கு.ஆரியன் என்றும்,திராவிடன் என்றும் பேசி,பிரிவினை உண்டாக்கிஅதில் அரசியல் ஆதாயம் கண்ட கூட்டத்திற்க்கு பதில் அளிக்க வேண்டிய காலம் வந்தாகிவிட்டது.
க்ஷத்ரிய குலத்தில் பிறந்த(தமிழர்களுக்கு புரிந்த மொழியில் சொல்ல வேண்டுமானால் வன்னிய குலத்தில்)கிருஷ்னர் அதே குலத்தில் பிறந்த அர்ஜுனனை பார்த்து ஆரியனாய் இல்லாமல் இருக்கிறாயே என கீதையில் கேட்கிறார், எனில் ஆரியம் ஒரு இனமா? இல்லை ஒரு குணமா?
அதே போல க்ஷத்ரிய குலத்தில் பிறந்த ராமனை ஆரியனே என வேடுவ குலத்தில் பிறந்த வால்மீகி எழுதுகிறார் எனில் ஆரியம் ஒரு இனமா இல்லை குனமா?
திராவிடன் என்றால் அவன் தமிழன் மட்டுமா? அதில் தெலுங்கன்,மலையாளி,கன்னடன்,மராட்டியன் உண்டா இல்லையா?
பழம் இலக்கியத்தில் திராவிடன் எனும் வார்த்தை விந்திய மலைக்கப்ப்பால் வசிக்கும் இந்த பகுதி மக்களையே குறிப்பிடுகுறது,ஆகவேதான் பிராமணராக பிறந்த ஆதி சங்கரரை திராவிட சிசு என பின் வந்தவர்கள் குறிப்பிடுகிரார்கள்.
அரசியலுக்காக ஒரு கொள்கையை பேசி,பின் அதிலும் ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து காசு சேற்க்கும் கொள்ளைக்கூட்டமாகத்தான் இந்த கழகங்கள் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
அவாள்,இவாள் என்றால் அது தமிழ் இல்லையாம்,வாப்பா உம்மா,மவுத்,மம்மி,டாடி என்றால் தமிழாம்,அவர்கள் தமிழர்களாம்,என்ன கொடுமைடா சாகடவுள் இல்லையாம்,இல்லவே இல்லையாம்,அதை சொல்பவன் காட்டு மிராண்டி,பரப்புபவன் முட்டாள்,இதையெல்லாம் எங்கே எழுதுவார்கள் தெரியுமா?
இந்து ஆலயங்கள் எதிரே, இதை ஒரு மசூதி வாசலிலோ,ஒரு தேவாலயம் எதிரிலோ எழுத மாட்டார்கள்.ஏன்? அது அவர்களின் அரசியலுக்கு பயன் தராது என்பது மட்டுமல்ல,அதை அந்த மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்,பதிலடி தருவார்கள் என்பதும் ஒரு முக்கியமான காரணம்.
சுவாமி விவேகானந்தர் ஒரு நாள் தன் சீடன் சின்கா வுடன் இப்படி பேசிக் கொண்டிருன்தார்,
மகனே சின்கா உன் தாயை ஒருவன் பழித்துப்பேசினால் நீ என்ன செய்வாய்?
சுவாமி உடனே பாய்ந்து சென்று என் தாயை பழித்த அவன் நாக்கை அறுத்தெறிவேன்.
சுவாமி இப்படி கேட்க்கிறார்?
உன் தாயை பழித்தவனையே இப்படி உணர்ச்சிக்கொண்டு பதில்கொடுப்பேன் என சொல்கிறாயே, தாயைக் காட்டிலும் மேலான நம் தர்மத்தை மிக மோசமாக பேசுபவர்களைக் கண்டு என்ன செய்யப் போகிறாய்?
இது சுவாமி விவேகானந்தர் சின்காவுக்கு மட்டும் கேட்ட கேள்வி அல்ல நம் அனைவருக்கும் கேட்ட கேள்விதான்?
என்ன செய்யப் போகிறிர்கள்?

RATHNESH said...

"கடவுள் மீதான வேண்டுதலுடன் ஒரு குழுவினர் தீ மிதிக்கிறார்கள்; அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு எதிரே, கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று சொல்லிக் கொண்டே இன்னொரு குழுவினரும் தீ மிதிக்கிறார்கள். இருவருக்குமே எதுவும் ஆவதில்லை; இதிலிருந்து என்ன தெரிகிறது?" என்கிற கேள்விக்கு, "கடவுளின் இருப்பு தீ மிதித்தல் போன்ற சடங்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்று தெரிகிறது" என்று ஒரு பதில் படித்த ஞாபகம் வருகிறது.

பிரியமுடன் பிரபு said...

அய்யா ஆனந்தன்
மற்ற மதம் பற்றி கூறினால் " ஒரு இந்து நம்மை பற்றி பேசிவிட்டான் " என்று கூறி மத பிரச்சனை வருமே அன்றி வேறு எதுவும் நடவாது

முதலில் நம் முதுகை சுத்தம் செய்வோம்

கலைஞருக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லை

பொய் முகம் said...

நல்ல தெளிவான பின்னூட்டமிட்டு இருக்கிறீர்கள் ஆனந்தன்,நன்றி.

ரதினேஷ், மற்றும் பிரியமுடன் பிரபுவிற்கும் என் நன்றிகள்!

raja vamsam said...

ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்று கீதை சொல்கிறது அனால் ஹிந்து சகோதரர்கள் கிடைக்கும் கல் மண் மாடுசாணம் எல்லாத்தயும் கடவுள் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள் பத்து பேர் சேர்த்துவிட்டால் பைபுளில் எதை வேண்டலும் சேர்க்கலாம் எதை வேண்டலும் அளிக்கலாம் என்றாகிவிட்டது முஸ்லீம். நான் தான் கடவுள் என்னை மட்டும் தான் வணங்கவேண்டும் என்று இறைவன் சொல்லியும் இறந்தவர்களின் உடலை தர்கா என்ற பெயரில் வைத்து வணங்குகிறார்கள் .இவர்கள் எல்லாம் எப்போது திருத்துவது .தவறு செய்கிறோம் என்று தெரிந்து செய்தால் திருத்தலாம் பக்தி என்று நம்பி தவறாக நடப்பவர்களை ? நமக்கு எதற்கு ஊர் வம்பு ! !

பொய் முகம் said...

"raja vamsam said...
ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்று கீதை சொல்கிறது அனால் ஹிந்து சகோதரர்கள் கிடைக்கும் கல் மண் மாடுசாணம் எல்லாத்தயும் கடவுள் என்கிறார்கள் "

உங்கள் கேள்விகளுக்கு விடை கொடுக்கும் வகையில் இனி வரப் போகும் பதிவுகள் அமையும்!

Blogging said...

நல்ல கருத்து பரிமாற்றம்

www.padugai.com

Post a Comment