உலகில் ஏழு அதிசயங்களில் ஒன்று, மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நினைவகம்,முதல் முறை பார்க்கும் போது நம் கண்கள் அதன் அழகினில் மூழ்கி வேறு திசைக்கு திரும்ப மறுக்கும் அளவிற்கு ரம்யமாக காட்சி அளிக்கும். இவை அனைத்தும் மறுக்க முடியாத ஒன்று. அப்படி ஒரு அற்புதம் தாஜ்மஹால்.
ஆனால் இது ஒரு காதலின் சின்னமா? யார் இப்படி ஆரம்பித்தது? நிச்சயமாக ஏதாவது ஒரு சினிமாக்காரராகத் தான் இருக்க வேண்டும். பழங்காலக் கவிகள் பலர் காதலை பற்றி கதைகள், கட்டுரைகள், கவிதைகள் பாடி இருந்தாலும், காதலை தாஜ்மஹாலுடன் ஒப்பிட்டு கவி பாடியதில்லை. அப்படி என்றால் இதை சினிமாக்காரர்கள் தான் துவக்கி இருக்க வேண்டும்.
ஷாஜகான் மும்தாஜ் மீது வைத்துள்ள காதலுக்காக கட்டியது தானே தாஜ்மகால். அது காதலின் சின்னம் தானே என்று நமக்கு தோன்றுவது இயல்பு. நாம் தாஜ்மகாலை சரியாகத் தான் உவமேயப் படுத்துகிறோமா என தெரிந்து கொள்ள, அப்படி என்ன தான் செய்தார் ஷாஜகான் என அறிந்து கொள்வது முக்கியம்.
முகலாய மன்னர் ஜஹாங்கீருக்கும், அவரது இரண்டாவது மனைவி ராஜ்புட் இளவரசி ஜகத் கோசைன் என்பவருக்கும் பிறந்தவர் தான் ஷாஜகான்(1628-1658). தாய் இந்துவாக இருந்தாலும்,இஸ்லாமின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். மற்ற சமயத்தினர் மீது இரக்கம் காட்டாத மிருகம் போல தான் வாழ்ந்தார் ஷாஜகான்.
1. இஸ்லாத்தின் கொள்கைகளை, கிறித்துவம் திருடுவதாக கூறி, தன் ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான கிறித்துவர்களை கொன்று குவித்தவர் இந்த ஷாஜகான்.
2. ஷாஜகானிற்கு வரலாற்றின் படி மொத்தம் 3 மனைவிகள் பெயர் தெரியும், ஆனால் பல மனைவியர் உண்டு என்று சொல்கிறார்கள். முதலாவது மனைவி தான் மும்தாஜ். அப்படியாப்பட்ட காதல்
இருந்தால் இரண்டாவது, மூன்றாவது மனைவியரை ஏன் மணந்தார் என்று தெரியவில்லை.
3.பல மனைவியர் மட்டும் இல்லாமல், தன்னை மகிழ்விக்க பெரும் மங்கையர் கூட்டத்தையே வைத்திருந்தார் ஷாஜகான். ஷாஜகானின் மகனான அவுரங்கஜீப் அவரை சிறை பிடித்த போது கூட, அந்த மங்கையர் கூட்டம் வேண்டும் என அட்ம் பிடித்து கூடவே வைத்து இருந்தாராம் ஷாஜகான். அப்படி ஒரு காமத்தின் அடிமை ஷாஜகான்.
4.தங்கள் பதினெட்டு வருட திருமண வாழ்க்கையில், மும்தாஜ் 14 பிள்ளைகளைப் பெற்றார். 14 வது பிள்ளையை ஈன்றெடுக்கும் போது தான் அவர் இறந்தார். அதன் பிறது 22000 ஊழியர்களை வைத்து, 22 ஆண்டுகளாக கட்டப்பட்ட கட்டிடம் தான் தாஜ் மகால்.
5. தாஜ்மகாலை கட்டி முடித்தவுடன், அதன் கட்டிட வடிவமைப்பாளரின் விழியைப் பிடுங்கி, தலையை வெட்டி(beheading) கொலை செய்தாராம் ஷாஜகான். அது மட்டுமல்ல, தாஜ்மகாலை உருவாக்க காரணமாக இருந்த 22000 தொழிலாளர்களின் இரு கை விரல்களையும் வெட்டினாராம் ஷாஜகான். யாரும் இது போல கட்டிடத்தை இனிமேல் கட்டக் கூடாது என்பது அவர் சொன்ன காரணம்.
ஒரே ஒரு பொண்ணுக்காக, இத்தனை பேரை கொடுமைப்படுத்தி, சாவடித்து, கட்டிய கல்லரை ஒரு காதலின் சின்னமா?
வரலாற்றை படித்த பின், தாஜ்மகாலைப் பார்த்தால் ஷாஜகானின் கொடுமைகளும், அவன் காம குணங்களும் தான் நினைவுக்கு வருகிறது.
காதல், இதில் தெரிகிறதா இல்லையா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் !
6 comments:
hello sir,
can you give me from where you got all the informations. kindly add reference details (like books, websites...)
நம்முடைய பாடப் புத்தகத்தில் உள்ள வரலாற்றைத் தவிர்த்து மற்ற வரலாற்று நூல்களில் இவைகள் உள்ளன. இணையத்தில் வைக்கிபீடியாவில் உள்ளது. தாஜ்மகால், ஷாஜகான் என கொஞ்சம் உள்ளே சென்று பார்த்தால் தெளிவு கிடைக்கும். தாஜ்மகாலின் கட்டிட வல்லுனரின் பெயர் உட்பட பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
மற்ற வரலாற்று நூல்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்( எழுதியவர்கள் பெயர் அல்லது நூல்களின் பெயர் ). இணையத்திலும் தாங்கள் எழுதியது போலவே குறிப்பிட்டுள்ளார்கள்( அவர்களும் நூல்களின் பெயர் குறிப்பிடவில்லை).
தாங்கள் எழுதிய 1,3,5 ஆகிய விவரங்களுக்குமான தளம் கிடைக்கவில்லை தயை கூர்ந்து இணைய விவரங்கள் தர வேண்டுகிறேன்.
புத்தகங்கள் பற்றிய விவரங்கள் கண்டிப்பாக தெரிவிக்கவும்
http://www.bookrags.com/biography/shah-jahan/#
இதில் முதல் பாயிண்ட் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Despite his Hindu mother, Shah Jahan did not follow the liberal religious policy instituted by his grandfather, Emperor Akbar. In 1632 he ordered all Hindu temples recently erected or in the process of erection to be torn down. Christian churches at Agra and Lahore were also demolished. In the same year the Portuguese settlement at Hooghly near Calcutta was also attacked. The Portuguese were accused of piracy and of kidnaping Mogul subjects, infecting them with Christian doctrines, and shipping them as slaves to Europe. The settlement was reduced, and several thousand Christians were killed
இதில் மூன்றாவது பாயிண்ட் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://en.wikipedia.org/wiki/Shah_jahan
Like all his ancestors, Shah Jahan's court included many wives,concubines and dancing girls. Several European chroniclers have noted this. Niccolao Manucci wrote that "it would seem as if the only thing Shah Jahan cared for was the search for women to serve his pleasure" and "for this end he established a fair at his court. No one was allowed to enter except women of all ranks that is to say, great and small, rich and poor, but all beautiful."[18] When he was detained in the Red Fort at Agra, Aurangzeb permitted him to retain "the whole of his female establishment, including the singing and dancing women."[19] Manucci notes that Shah Jahan didn't lose his "weakness for the flesh" even when he had grown very old.[20]
இதில் ஐந்தாவது பாயிண்ட் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Taj Mahal - Gilles Tillotson
http://books.google.co.in/books?id=ETZ4iBm3z0YC&pg=PA83&lpg=PA83&dq=ustad+ahmad+lahauri&source=bl&ots=NDHhagbj1j&sig=Yj2ba063LQ435ZSFtZj-NzJsU8w&hl=en&ei=zPTGSpv7Cczk8Qa53-ThCA&sa=X&oi=book_result&ct=result&resnum=2#v=onepage&q=ustad%20ahmad%20lahauri&f=false
இந்த மாதிரியான விரல்கள் வெட்டப்பட்டதற்காக நேர்முகமாக யாரும் எழுதி வைத்தது போன்ற ஆதாரங்கள் கிடையாது. ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் மற்றவர்கள் சொல்ல கேட்டிருப்பதாக இந்தப் புத்தத்தில் குறிப்பிட்டுள்ளனர். பல தளங்களிலும் குறிப்பிட்டுள்ளனர். சில இடங்களில் இதனை Myth என்றும் சில இடங்களில் Rumour என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, தாஜ் மகாலை வடிவமைத்த கட்டிட வல்லுனர் யார் என்பதும் உறுதியாக இன்னும் தெரியாது. உஸ்தாத் ஈசா என்கிற பெர்சிய நாட்டவர் தான் இதை வடிவமைத்தார் என்றும் இன்னும் சிலர் உஸ்தாத் அஹ்மத் லஹௌரி தான் இதனை வடிவமைத்தார் என்றும் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
ORU ALAGANA KALARAI THATSALL
ORU ALAGANA KALARAI THATSALL
Post a Comment